Wednesday, 21 October 2015

இந்த சிகாமணியை அறிவீர்களா?




பல பதிவர்களின் தளங்களுக்கு சென்று தம் கருத்தை பதிவு செய்துள்ள இந்த சிகாமணியை யாராவது அறிவீர்களா? தெரிந்தால் சொல்லுங்களேன்... நேரில் போய் ஒரு வணக்கம் வைக்கலாம்...

<<<>>
இது மாதிரி கூவி கூவித்தான் நம்மளை ஒழித்தார்கள். அது சரி புலி என் புறப்பட்டு வான்ன என்ன அர்த்தம் அய்யா! சரி! புலி எப்படி புறப்படும் என்று யாரும் பள்ளியில் எங்களுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை...கூடவே கொஞ்சம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

புலியென புறப்பட்டு வா! சிங்கமென சீறி வா
.
பசு போல அசைந்து வா!
பாம்பென படமெடுத்து வா!
குரங்கு போல் சொரிந்து வா!
குதிரை மாதிரி கனைத்து வா!
யானை போல பிளிறிகிட்டு வா!
கழுதை போல உதைத்து கொண்டு வா!
பல்லி போல் ஒட்டிக்கிட்டு வா!
பறவை போல பறந்து வா!
நாய் போல ஒரு காலைத் தூக்கி வா!
ஆனால்......என்ன ஆனால்?
ஆனால், பதிவர் கூடத்திற்கு, எக்காரனத்தைக் கொண்டும்...
மனிதன் மாதிரி வராதே!

அய்யா!
தினமணி ஆசிரியர் அல்லது அவர்கள் REPRESENTATIVE- கள் வருவதாக ஒரு செய்தி. அவர்களுக்காக அசைவம் சாப்பாட்டில் இல்லையா? பாலும் அசைவம் தானே! அதை போடும்போது மீதி எல்லாவற்றையும் போட்டால் என்ன?
பெயரில் அன்பை வைத்துக்கொண்டு, இப்படி ஆடுமாடுகளின் மேல் அன்பில்லாமல் இருப்பது (?) நியாயமாரே? நாங்க வள்ளலார் வழி. ஒரு செய்தி தெரியுமோ? “நல்ல சைவச் சாப்பாடு சாதாரண அசைவச் சாப்பாட்டை விட நல்லாவும் இருக்கும், கொஞ்சம் காஸ்ட்லியாவும் இருக்கும்!“என்கிறார் எங்கள உண(ர்)வுக்குழுத் தலைவர் சகோதரி இரா.ஜெயலட்சுமி! வந்து பாருங்க!
  1.  
பெயரில் அன்பு இருப்பதால் தான் நான் பசுவிடம் இருந்து [திருடும்] பால், மோர் அவைகளைக் கூட உண்பதில்லை. ஆடு, மாடு கோழி, பன்னி சாப்ப்டுவனுக்கு குழந்தைக்கு {கன்று} வைத்துள்ள அம்மாவின் (பசு) பாலை திருடுபவன் அயோக்கியன்.

ஒன்றுக்கும் உதவாதா அடி மாட்டை சாப்பிடுபவ்ன் யோக்கியன் . உங்க ஜெயலட்சுமி அம்மா பசுவிடம் இருந்து திருடாத பால் மற்றும் மோர் சமையாலா?
அய்யா! சாமிகளே! விட்டா காய்கறியக் கூடச் சாப்பிட விட மாட்டீங்க போல! ஆமா ஆடும் மாடும்தான் உயிரினமா? காய்கறி செடிகொடி மரம் எல்லாம் என்னவாம்? அவையும் “உயிரினம்தான்“ அதாவது “ஓரறிவுயிரினம்தான்“ என்று கண்டு சொன்னதற்காகத்தானே நம்ம போஸ் நோபல்பரிசு வாங்கினார் அதைத்தானே நம்ம தொல்காப்பியரும் அப்பவே சொன்னாரு? அப்பறம் எதத்தானய்யா சாப்பிடுறது? மண்புழு மாதிரியா?
  1.    அன்பேதமிழ் வியாழன், 8 அக்டோபர், 2015 ’அன்று’ 6:17:00 முற்பகல் IST
முனைவர் அய்யா!
இதுவரை நடந்த எல்லா பதிவர் சந்திப்பக்களும்--பதிவர்கள் நலனை நோக்கி நடந்தது என்பதே என் மதிப்பீடு!. அது பதிவர் மீட்டிங்கானலும் உணவு விஷயத்திலும் பதிவர்கள் நலன் நோக்கியே இருந்தது. எல்லா பதிவர் சந்திப்புக்கும் நான் ஒரே அட்ரெஸ் இல்லாத ஆளாக வந்திருக்கிறேன். புதுக்கோட்டைக்கும் வருவேன்.

அனால், இப்ப நடக்கும் புதுக்கோட்டை சந்திப்பு, ஒரு சிலர் (ஏன் ஒருவர் தான்) முன்னேற்றத்தை நோக்கியே செயல்படுகிறது.அவர் அவருடைய அஜெண்டவை அழகாக அரங்கேற்றுகிறார். அவருக்கு என்று ஒன்றும் அறியாதா அப்பாவி கூட்டம் ஏதும் அறியாமல் ஒத்து ஊதிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்[கள்] வள்ளலார் வழி என்றால் அது அவர் வீட்டோடு போகவேண்டும்! வள்ளலாரை யார் கொளுத்தினர்க்கள் என்பது ஊரே அறியும். அதை உங்களால் சொல்லமுடியுமா? இல்லை நீங்கள் உண்மையை சொன்னால் தான் ஊடகங்கள் உங்களை மதிக்குமா? (குறிப்பாக பார்ப்பன ஊடகங்கள்). என் கேள்வி? , Is Vallarar an authority of what we should eat? பயிதிக்கார உலகம். வள்ளலாரை கொளுதினவர்களின்----- அடிவருடிகள், நம்மாள் உள்பட, வள்ளலாரைப் பற்றி பேசக்கூடாது!

இந்த பதிவர் கூட்டத்தை நடத்துபவர், அவர் முன்னுக்கு வர "மட்டுமே" செயல்படுகிறார். சாப்பாட்டில் எல்லா கறியும் போடுங்கப்பா. ஆனால், மோர் மட்டும் பால் இருக்கும் பக்கம் எங்களுக்கு சாப்பிடும் இடம் வேண்டாம்!

என்னங்க நம்ம விழா! அதுவும் நம் அண்ணன் முத்துநிலவன் உயிரைகொடுத்து வேலை செய்து இருக்கிறாரர். மேலும், உங்களையும் சந்திக்கும் ஆசை எனக்கு இருக்கு.ம பார்ப்போம் நாளை. சில வரிகள் நம் தலைவர் முத்துநிலவன் உழைப்பப் பற்றி!

முத்துநிலவன் மற்றும் அவர் குழுவிற்கு என் அநேக நமஸ்காரங்கள்! இப் படை வெற்றி அடையாவிடின் எப்படை வெற்றி கொள்ளும். இனி, அடுத்த பதிவர் விழாவிற்கு புதுக்கோட்டை சந்திப்பை தான் எல்லோரும் உதாரணமாக கொள்வார்கள்------கொள்ளவேன்டும்!

புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு ஒரு Bench Mark--என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இது மாதிரி இனிமேல் இப்படி ஒரு விழாவை, முத்துநிலவன் குழுக்கள், மாதிரி மற்றவர்கள் நடத்துவது கடினம் என்று சொல்வதைவிட---Impossible---என்று சொல்லலாம்.

முத்துநிலவன் குழு உழைப்ப்பு வாழ்க!

இதையும் வெளியிடுங்கள். முத்துநிலவன் புகழ் ஓங்குக!

முத்துநிலவன் மற்றும் அவர் குழுவிற்கு என் அநேக நமஸ்காரங்கள்! இப் படை வெற்றி அடையாவிடின் எப்படை வெற்றி கொள்ளும். இனி, அடுத்த பதிவர் விழாவிற்கு புதுக்கோட்டை சந்திப்பை தான் எல்லோரும் உதாரணமாக கொள்வார்கள்------கொள்ளவேன்டும்!

புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு ஒரு Bench Mark--என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இது மாதிரி இனிமேல் இப்படி ஒரு விழாவை, முத்துநிலவன் குழுக்கள், மாதிரி மற்றவர்கள் நடத்துவது கடினம் என்று சொல்வதைவிட---Impossible---என்று சொல்லலாம்.

முத்துநிலவன் குழு உழைப்ப்பு வாழ்க!




ரொம்ப அருமையா PIN ஊட்டம் குடுக்குராரு.. ஆனா அவர் பிளாக்குதான்
'பிம்பிளிக்கே பிளாப்பின்னு'
தொறக்க மாட்டேங்குது.. ஒரு கோணி ஊசி வெச்சி போட்டு முயற்ச்சி பன்னுலாமான்னு யோசிக்கிறேன்..

Wednesday, 14 October 2015

முரளி அய்யாவுக்கு என்பதில்

 திருப்பதி மஹேஷின் வலைப்பக்கத்தில்

பின்னூட்டமிருந்த டி.என். முரளி அய்யாவுக்கு அதே பக்கத்தில்

பின்னூட்டமாக நான் தந்திருந்த பதில். கீழே

இதில் என்னைவிட இளையவர் என்ற காரணத்தினால் அல்ல

எனக்குள் அவரால் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே

உரிமை இருக்கிறது எனும்

நினைப்பாலும்

உள்ளிருக்கும்

அன்பாலும்தான்

'ன்' என்று குறிப்பிட்டுள்ளேன்..

தவறாக கொள்ளவேண்டாம்..


 
மன்னிக்கனும் அய்யா

நானெங்கே அவனை அழைத்து வந்தேன்

அழைத்தது அவன்

வந்தது இவன்

அவன் அழைத்ததுதான் உண்மை

நான் நினைத்தது அவனுக்கு

துணைக்கு அழைக்கிறானென்று.

கடைசியில்தான் தெரி(ளி)ந்தது

அவன் என்னை வழித்துணையாய்

அழைக்கவில்லை.

என்னை வழி நடத்திடத்தான்

அழைத்தானென்று.

அவனுக்கு இல்லாவிட்டாலும்

எனக்கிருக்கிறது. ஆண்டவன் மீது

நம்பிக்கை

அந்த நம்பிக்கையில் சொல்கிறேன்.

அந்த நாட்களில் என்னை ஆண்டவன்

அவன் தான்

ஆம் என் ஆண்டவன் அவன் தான்.

Monday, 5 October 2015

தேவை ஓர் வழிகாட்டி


வலைப்பதிவர் சந்திப்பு குறித்து பலரும் பல தகவல்களையும்

போதும் போதும்

என்கிற அளவுக்கு பதிந்து விட்ட போதும்

சில அனுபவங்களை கொண்டு

எனது ஆலோசனைகளை முன் வைக்கின்றேன்..

1) அரங்கிற்குள் புகைக்கு மட்டுமல்ல புகைப்படத்திற்கும் அனுமதி

கூடவே கூடாது... காரணம் கையில் புகைப்படக் கருவி (அல்லது கைபேசி)

இருக்கிறது என்பதற்காகவே தங்கள் விருப்பப்படி கண்டதையெல்லாம்

புகைப்படமாக எடுத்து வெளியிடுவதென்பது புதிதாக தோன்றி விட்ட ஒரு

கலாச்சாரமாக மாறிவிட்டது. இதனால் பதிவர்கள் நேரடியாகவும் விழா

நடத்துனர்கள் மறைமுகமாகவும் பெரிதும் பாதிக்கப்படுவர்..


2) வெளியூரிலிருந்து வரும் பதிவர்களுக்காகவே நடைபெறும் இவ்விழா

நடைபெறும் வளாகத்திற்கு வர தேவையான வழிகாட்டுதல் தொலை மற்றும்

அலைபேசி எண் (உடன் எளிதாக வர வாய்ப்பிருந்தால் வரைபடத்துடன்)

தருதல் நன்று  இதனால் பதிவர்கள் சிரமம் குறையும்.


3) பதிவர் சந்திப்பு எனும் நிகழ்வு முழுமை பெற வேண்டி இதை பகிர்கிறேன்.

பல பதிவர்கள் தாம் விரும்பும் சில பதிவர்களை சந்தித்து அளவளாவலாம் 

அல்லது அளவில்லாமல் உரையாடலாம் எனும் அவாவில் வருவர். அவர்தம்

எதிர்பார்ப்பை ஓரளவேனும் பூர்த்தி செய்ய சிறு இடைவேளைகள் குறைந்தது

இரண்டாவது தர வேண்டும்.


4) பதிவர் அனைவரும் மேடையேறி தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச

(வேண்டும் எனும் சிலர் குரல் கேட்கிறது ஆயினும்) வாய்ப்பு இருக்குமா?

எனவே அருள் கூர்ந்து பேச விரும்பும் பதிவர்களை மட்டும் மேடையில் பேச

அழைக்க வேண்டுகிறேன்.


5) பதிவர் சந்திப்பில் மேடையேறுபவர் பதிவர் தான் எனும் கட்டுப்பாடு

(விருந்தினருக்கு விலக்களிக்கலாம்)  விழா நடத்துனர்களுக்கு

ஏற்படக்கூடிய தர்மசங்கடங்களை தவிர்க்கவே இந்த ஆலோசனை..
 

Monday, 28 September 2015

முதன்மையானது




முதல் உதவி 
மேற்கண்ட தலைப்பை தமிழில் அறியாதவர் இருக்க வாய்ப்பில்லை.
ஒருவேளை அறிய தவறி இருப்பின் அவர் தமிழை அறிந்ததில் அர்த்தமில்லை.

முதலுதவி எனப்படும் சொல்லுக்கு நாம் அறிந்து வைத்திருக்கும் பொருள்... ஒரு நபர் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கைசீற்றம், விபத்து, மற்றும் விஷபூச்சிகளால் தாக்குதலுக்கு உட்பட நேரும் பொழுது அவரைக் காக்க அருகில் உள்ளவர் தம்மால் இயன்ற முயற்ச்சிகளை மேற்கொள்வது என சொல்லப்பட்டிருக்கிறது.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் கவனிப்பாகும். சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயப்பட்ட நபர்க்கு அளிக்கப்படும். இது மருத்துவத்துறையில் சிறப்புடைய நிபுணர் - அல்லாத எனினும் பயிற்சி பெற்ற ஒரு நபரால் அளிக்கப்படும். சில கட்டுப்படுத்தக்கூடிய நோய்கள் மற்றும் சிறிய காயங்களுக்கு முதலுதவி அளித்த பிறகு மருத்துவத் தலையீடு தேவையில்லாமலே போகலாம். முதலுதவி சாதாரண, சில சமயங்களில் உயிர் காப்பாற்றுகிற திறன்களை உள்ளடக்கியது. இவைகளை ஒருவர் குறைந்த உபகரணங்களைக் கொண்டே செயல்படுத்தும் வகையில் முதலுதவி அமைய வேண்டும்.
முதலுதவி அனைத்து விலங்குகளுக்கும் கொடுக்கப்படலாம் என்றபோதிலும், பொதுவாக இச்சொல் மானுடர்களுக்குத் தரும் கவனிப்பையே குறிக்கிறது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது..

இதில் முதல் உதவி என்ற சொல்லுக்கு நிகரான சிறப்பான சொல்லாக வேறு எதுவும் தோன்றாத நிலையிலேயே…

எனக்குள் உள்ள சில அய்யங்களை முன் வைத்து தொடர்கிறேன்…
பொதுவாக ஒருவர் எதிர்பாராதவகையில் விபத்துக்குட்பட்டு அவருக்கு அருகில் உள்ளவர் தனக்கு தெரிந்த சில எளிய உதவிகள் நிச்சயம் பாதிக்கப்பட்டவருக்கு பெரும் ஆறுதலையும் தரும் என்பதுடன் இழப்பை பெருமளவுக்கு குறைக்குமென்பதால் அதைக்குறைத்து கூறவோ அல்லது காயப்படுத்தவோ இம்முயற்ச்சி இல்லை. மாறாக...

ஒருவர் எதிர்பாராமல் விபத்தில் சிக்குவதே முதல் நிகழ்வாகிவிடும்போது அவருக்கு அருகில் உள்ளவர் சிகிச்சை அளிப்பதில் கை தேர்ந்தவராக இருந்தாலும் சிகிச்சை அளிப்பதென்பது இரண்டாம் நிகழ்வுதானே..

உண்மையில் முதலுதவி என்பது ஒருவர் காயப்படுவதை தவிர்க்கும் நோக்கில் செய்யப்படும் முன்னேற்பாடாக இருக்குமானால் நிச்சயம் தற்போது நடைபெற்று வரும் பெருமளவிலான விபத்துகள் நடைபெறாமல் இருந்திருக்கும் உதாரணமாக சில சம்பவங்களை குறிப்பிடுகிறேன்...
 
தலைக்கவசம் உயிர்கவசம்

மேற்கண்ட வாசகத்தை எங்காவது படித்திருக்கலாம்.

இது இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டும் போதும். இது அவர்களுக்குத்தான் பொருந்துமென்கிற மனப்பான்மை பொதுவாக நம் மண்டைக்குள் திணிக்கப்பட்டுவிட்ட ஒரு கற்பிதமான நியாயமாகிவிட்டது.

ஏனெனில் கற்றறிந்த பொறிஞர்கள் மற்றும்  தொழில்நுட்ப பணியாளர்கள் பலர் பணியாற்றும் பல்வேறு அரசு, தனியார்,  மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தரை மட்டத்திலிருந்து பல அடிகள் உயரத்தில் பணிபுரியும் பணியாளர்களின் உயிர் பற்றி சிறிதேனும் அக்கறை இருந்திருந்தால் இன்னும் இவர்களுக்கு தலைக்கவசம் தரப்படவில்லையே என்ற சிந்தனை நிச்சயம் வந்திருக்கும்... அதன் தொடர்ச்சியாக உயரத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கென்று வழங்கிட உரிய தலைமையிடத்தில் கேட்கப்பட்டிருக்கும். அதன் பயனாக இந்நேரம் உயிர்க்கவசம் என சொல்லப்படும் (இல்லையில்லை) மதிக்கப்படும் (தரமான) தலைக்கவசம் ஒரு வேளை வழங்கப்பட்டிருந்தால் திறம்பட பணி செய்து வந்த பல பணியாளர்களின் இழப்பை தவிர்த்திருக்கலாம்...

(தொடர்கிறேன்)

Friday, 18 September 2015

விமர்சனங்களுக்கு விலக்கப்பட்டவரா கலாம்?


அண்மையில் சில பதிவர்களின் பதிவுகளையும் தமிழகத்தின் 


தன்னிகரில்லா? ஒரு எழுத்தாளரின் படைப்பையும் படிக்க நேர்ந்தது
(என் துரதிர்ஷ்டமே)
 

அதில் அய்யா கலாம் அவர்கள் மீது விமர்சனம் என்ற பெயரில் வாந்தி எடுத்து
 

வைத்திருந்தார்கள்.
 

பொதுவாக இப்படிப்பட்ட விஷ(ய)ங்களை விட்டு விலகி செல்வதுதான் 

அறிவார்ந்த செயல் என்றாலும் அதில் உள்ள வன்மம் நிறைந்த வசை 

சொற்கள் கண்டு  மனம் நொந்தேன்.
 

விமர்சனம் என்று இவர்கள் விஷத்தை கக்குவது யார் மேல் ?
 

நிச்சயம் பதில் சொல்ல இயலாத நிலையில் மறைந்து விட்ட ஒரு 

மகானை  வாரித்தூற்றி மேதைகள் தங்கள் கண் முன்னே சமுதாயத்தை 

பலவகையிலும் சுரண்டி தம் வழித்தோன்றல்களுக்கு சொத்து சேர்ப்பதை 

தொழிலாக கொண்டு தம் தேவைக்காக நாட்டை நாசப்படுத்தும் 

பணிகளை சிரமேற்கொண்டு திறம்பட செய்து வரும்
 

தலைவர்களை பார்த்து சொல்லட்டுமே துணிவிருந்தால்...?
 

ஒரு தலைமுறையையே சீரழித்ததுடன் அரசியல் நாகரீகத்தையும் புதை 

குழிக்குள் கொன்று புதைத்து ஆனந்த கூத்தாடும் அரைகுறைகளை 

விமர்ச்சியுங்களேன். வீடு தேடி ஆட்டோ வரும் என்று (அ)பயமா?.
 

அதை விடுத்து கண்ணியத்தோடு வாழ்ந்து மறைந்த ஒரு மகானின்

மறைவுக்கு பின் ஏசியதின் மூலம் இவர்களின்  குறை மனம்தான் 

வெளிச்சத்துக்கு வந்திருக்கிறதே தவிர அவர் புகழுக்கு எவ்வகையிலும் 

களங்கமில்லை.  இவ்வுலகில் மனிதராய் பிறந்த எவரும் 

(தலைப்பை மீண்டும் சொல்கிறேன்)

விமர்சனங்களுக்கு விலக்கப்பட்டவர் அல்ல. இது அய்யா கலாம் 

அவர்களுக்கும் பொருந்தும்.  ஆனால் விமர்சனம் என்ற பெயரில் 

ஆதாரமில்லாத உப்புசப்பற்ற விஷத்தை கக்குவது பகுத்தறிவுக்கு உகந்த 

செயலா சிந்திக்க வேண்டும்.

சிந்திப்பார்களா? 

அய்யோ அதுக்கு மூளை வேனுமேன்றீங்களா? அதுவும் சரிதான்.

4 கருத்துகள்:

  1. ஆனால் விமர்சனம் என்ற பெயரில் ஆதாரமில்லாத உப்புசப்பற்ற
    விஷத்தை கக்குவது பகுத்தறிவுக்கு உகந்த செயலா சிந்திக்க
    வேண்டுகிறேன்.///

    அருமை சார்.
    சரியா சொல்லிட்டீங்க.
    அதெல்லாம் வேலவெட்டி இல்லாதவர்கள் செய்வது.

  2. உண்மைதான் நண்பரே
    விமர்சனம் என்ற பெயரில் விஷத்தைக் கக்குவது சரியல்லவே
    நன்றி

Wednesday, 2 September 2015

ஹைய்யோ மற(தி)த்தமிழங்களா

 

ஹைய்யோ மற(தி)த்தமிழங்களா

ஒண்ணு பாத்து சொல்லணும்

இல்லை பட்டு அறிந்து சொல்லணும்

யாரோ சொன்னாங்கன்னு

நம்பியார் அல்ல

நம் தம்பி யார் போல

தோற்றம் கொண்ட

ஒருவரை 

கண்டு உரைக்கிறார்

அவர் ம து ரை   தமிழனென்று

அது கண்டு சிலர் நகைக்கிறார்

யார் தமிழனென்று.

இதைத்தான்

நம்ம வள்ளுவர் அய்யா

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்

அப்டின்னும்

மக்கள் ஸ்டார்

(வருண்கால  அமெரிக்க ஜனாதிபதி அண்ணன்) கவனிக்க...,

ரசினி அண்ணன்

மாயா மாயா ன்னும்  

ஒலக நாயகன் கமல் 

மாயா மச்சிந்ரான்னும்  பாடி வச்சிருக்காங்க

போல???!!!

ஆமா ஒருத்தர்

நான்தான் அவர்னு

சொன்னா அப்பிடியேவா நம்பிடறது.

சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு.

 ஹைய்யோ மறதி தமிழங்களா!!! 

மன்னிச்சுக்கோங் க மறத்தமிழங்களா!!!











3 கருத்துகள்:

  1. ஒண்ணுமே புரியலைங்க! இப்பவே கண்ணைக் கட்டுதேனு போன பதிவு...இப்ப எங்களுக்குக் கண்ணக் கட்டுது ...கண்ணக்கட்டி விட்டாப்புல இருக்குதுங்க....
    பதில்கள்
    1. உங்களுக்கு புரியலையா?!
      அடேங்கப்பா இது ஓலக நடிப்புடா சாமீ !
  2. வாங்க வில்லங்கத்தாரே
    ஏன் சொல்லமாட்டீங்க நீங்க பாட்டுக்கு அடிச்சுக்கூட கேப்பாங்க எதுவும் சொல்லிட்டாதீங்காண்ணு சொல்லிட்டு போய்ட்டீங்க. இப்ப பாக்குறவங்க எல்லாம் கேக்குறது. அதைத்தான்.

Monday, 31 August 2015

எதைத்தின்றால் தெளியுமிவர்களின் பித்தம்

தன்னை மறந்து

தான் சார்ந்த மதம்தான் சிறந்தது என நிரூபிக்க

என தான் தான் உண்மையான

சிறந்த

ஹிந்து
!!!!!!!!!!!!

கிருத்துவன்
!!!!!

முகமதியன்
!!!!!

என்று மூடத்தனமாக நம்பும்

சிலர் செய்யும் செய்கைகள்

சில நேரங்களில் சிரிப்பூட்டுவதாகவும்

சில நேரங்களில் அச்சமூட்டுவதாகவும்

சிலநேரங்களில் அசிங்கமானதாகவும்

சிலநேரங்களில் கோபமூட்டுவதாகவும்

இருக்கிறது.

இதில் எனக்கு நீண்ட நாட்களாக இருக்கும்

ஒரு வியப்பு நிறைந்த சந்தேகம்

இவர்களெல்லாம்

முதலில் இவர்கள் பெற்றோரை விரும்பி

அவர்கள் மூலம் வந்தார்களா? என்பதுதான் .

குறைந்தது இதையே தேர்ந்தெடுக்க முடியாத

இந்த அறிவு ஜீவிகள்

தங்கள் மதத்தை மட்டும் எப்படி இத்தனை

உறுதியாக பற்றிக்கொண்டிருக்கிறார்கள்..

என்னமோ போங்க....