முதல் உதவி
மேற்கண்ட தலைப்பை தமிழில் அறியாதவர்
இருக்க வாய்ப்பில்லை.
ஒருவேளை அறிய தவறி இருப்பின் அவர்
தமிழை அறிந்ததில் அர்த்தமில்லை.
முதலுதவி எனப்படும் சொல்லுக்கு நாம்
அறிந்து வைத்திருக்கும் பொருள்... ஒரு நபர் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கைசீற்றம்,
விபத்து, மற்றும் விஷபூச்சிகளால் தாக்குதலுக்கு உட்பட நேரும் பொழுது அவரைக்
காக்க அருகில் உள்ளவர் தம்மால் இயன்ற முயற்ச்சிகளை மேற்கொள்வது என
சொல்லப்பட்டிருக்கிறது.
கட்டற்ற கலைக்களஞ்சியமான
விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் கவனிப்பாகும். சிறந்த மருத்துவ
சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயப்பட்ட
நபர்க்கு அளிக்கப்படும். இது மருத்துவத்துறையில் சிறப்புடைய நிபுணர் - அல்லாத
எனினும் பயிற்சி பெற்ற ஒரு நபரால் அளிக்கப்படும். சில கட்டுப்படுத்தக்கூடிய
நோய்கள் மற்றும் சிறிய காயங்களுக்கு முதலுதவி அளித்த பிறகு மருத்துவத் தலையீடு
தேவையில்லாமலே போகலாம். முதலுதவி சாதாரண,
சில சமயங்களில் உயிர் காப்பாற்றுகிற
திறன்களை உள்ளடக்கியது. இவைகளை ஒருவர் குறைந்த உபகரணங்களைக் கொண்டே செயல்படுத்தும்
வகையில் முதலுதவி அமைய வேண்டும்.
முதலுதவி அனைத்து விலங்குகளுக்கும் கொடுக்கப்படலாம் என்றபோதிலும்,
பொதுவாக இச்சொல் மானுடர்களுக்குத் தரும்
கவனிப்பையே குறிக்கிறது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது..
இதில் முதல் உதவி என்ற சொல்லுக்கு
நிகரான சிறப்பான சொல்லாக வேறு எதுவும் தோன்றாத நிலையிலேயே…
எனக்குள் உள்ள சில அய்யங்களை முன்
வைத்து தொடர்கிறேன்…
பொதுவாக ஒருவர் எதிர்பாராதவகையில்
விபத்துக்குட்பட்டு அவருக்கு அருகில் உள்ளவர் தனக்கு தெரிந்த சில எளிய உதவிகள்
நிச்சயம் பாதிக்கப்பட்டவருக்கு பெரும் ஆறுதலையும் தரும் என்பதுடன் இழப்பை
பெருமளவுக்கு குறைக்குமென்பதால் அதைக்குறைத்து கூறவோ அல்லது காயப்படுத்தவோ
இம்முயற்ச்சி இல்லை. மாறாக...
ஒருவர் எதிர்பாராமல் விபத்தில்
சிக்குவதே முதல் நிகழ்வாகிவிடும்போது அவருக்கு அருகில் உள்ளவர் சிகிச்சை
அளிப்பதில் கை தேர்ந்தவராக இருந்தாலும் சிகிச்சை அளிப்பதென்பது இரண்டாம்
நிகழ்வுதானே..
உண்மையில் முதலுதவி என்பது ஒருவர்
காயப்படுவதை தவிர்க்கும் நோக்கில் செய்யப்படும் முன்னேற்பாடாக இருக்குமானால்
நிச்சயம் தற்போது நடைபெற்று வரும் பெருமளவிலான விபத்துகள் நடைபெறாமல்
இருந்திருக்கும் உதாரணமாக சில சம்பவங்களை குறிப்பிடுகிறேன்...
தலைக்கவசம் உயிர்கவசம்
மேற்கண்ட வாசகத்தை எங்காவது
படித்திருக்கலாம்.
இது இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டும் போதும். இது அவர்களுக்குத்தான் பொருந்துமென்கிற மனப்பான்மை பொதுவாக நம் மண்டைக்குள் திணிக்கப்பட்டுவிட்ட
ஒரு கற்பிதமான நியாயமாகிவிட்டது.
ஏனெனில் கற்றறிந்த பொறிஞர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் பலர் பணியாற்றும் பல்வேறு அரசு, தனியார், மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தரை மட்டத்திலிருந்து பல அடிகள் உயரத்தில் பணிபுரியும் பணியாளர்களின் உயிர் பற்றி சிறிதேனும் அக்கறை இருந்திருந்தால் இன்னும் இவர்களுக்கு தலைக்கவசம் தரப்படவில்லையே என்ற சிந்தனை நிச்சயம் வந்திருக்கும்... அதன் தொடர்ச்சியாக உயரத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கென்று வழங்கிட உரிய தலைமையிடத்தில் கேட்கப்பட்டிருக்கும். அதன் பயனாக இந்நேரம் உயிர்க்கவசம் என சொல்லப்படும் (இல்லையில்லை) மதிக்கப்படும் (தரமான) தலைக்கவசம் ஒரு வேளை வழங்கப்பட்டிருந்தால் திறம்பட பணி செய்து வந்த பல பணியாளர்களின் இழப்பை தவிர்த்திருக்கலாம்...
ஏனெனில் கற்றறிந்த பொறிஞர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் பலர் பணியாற்றும் பல்வேறு அரசு, தனியார், மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தரை மட்டத்திலிருந்து பல அடிகள் உயரத்தில் பணிபுரியும் பணியாளர்களின் உயிர் பற்றி சிறிதேனும் அக்கறை இருந்திருந்தால் இன்னும் இவர்களுக்கு தலைக்கவசம் தரப்படவில்லையே என்ற சிந்தனை நிச்சயம் வந்திருக்கும்... அதன் தொடர்ச்சியாக உயரத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கென்று வழங்கிட உரிய தலைமையிடத்தில் கேட்கப்பட்டிருக்கும். அதன் பயனாக இந்நேரம் உயிர்க்கவசம் என சொல்லப்படும் (இல்லையில்லை) மதிக்கப்படும் (தரமான) தலைக்கவசம் ஒரு வேளை வழங்கப்பட்டிருந்தால் திறம்பட பணி செய்து வந்த பல பணியாளர்களின் இழப்பை தவிர்த்திருக்கலாம்...
(தொடர்கிறேன்)
பயனுள்ள பதிவு
ReplyDeleteநன்றி நண்பரே
வணக்கம் நண்பரே நல்லவொரு விளக்கவுரை தந்த பயனுள்ள பதிவு நானும் தொடர்கிறேன்
ReplyDeleteதங்களது தளத்தில் இணைத்துக்கொண்டேன் தமிழ் மண பட்டை இல்லையா ? அல்லது வைத்ததை பூதம் தாக்கிப்போய் விட்டதா ?
நண்றி நன்பரே
Deleteஇது தூக்கும் பூதமோ! அல்லது தாக்கும் பூதமோ அல்ல...
'உரு' ஆக்கும் பூதம் அல்லது காக்கும் பூதம் ஆக மட்டுமே இருக்க விரும்பும் பூதம்..
எத்தகைய இடர் வந்தாலும் தங்கள் போன்ற நல்லோர் நட்புக்காக ஏங்கும் இந்த பூதம்..
அந்த நட்புக்கு ஒரு தேவை என்றால் தாங்கும் பூதம்... ஒரு வேளை நட்பென்ற பெயரில் உள்ள சில போலிகளை களையடுக்க.. அரி(றி)வாளெடுக்கவும் தயங்காது எப்போதும் .. இப்பூதம் .. கொஞ்சம் உணர்சிவசப்பட்டுவிட்டேன் நண்பரே எல்லாம் சக(வாச)தோஷமாம்...
மறுமொழியிடும் பொழுது உங்களுக்கு ஜலதோஷம் பிடித்திருந்தென்று நினைக்கிறேன் சரியா ? நண்பரே....
Deleteசிறந்த வழிகாட்டல்
ReplyDeleteவணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்
ReplyDelete