அண்மையில் சில பதிவர்களின் பதிவுகளையும் தமிழகத்தின்
தன்னிகரில்லா? ஒரு எழுத்தாளரின் படைப்பையும் படிக்க நேர்ந்தது
(என் துரதிர்ஷ்டமே)
அதில் அய்யா கலாம் அவர்கள் மீது விமர்சனம் என்ற பெயரில் வாந்தி எடுத்து
வைத்திருந்தார்கள்.
பொதுவாக இப்படிப்பட்ட விஷ(ய)ங்களை விட்டு விலகி செல்வதுதான்
அறிவார்ந்த செயல் என்றாலும் அதில் உள்ள வன்மம் நிறைந்த வசை
சொற்கள் கண்டு மனம் நொந்தேன்.
விமர்சனம் என்று இவர்கள் விஷத்தை கக்குவது யார் மேல் ?
நிச்சயம் பதில் சொல்ல இயலாத நிலையில் மறைந்து விட்ட ஒரு
மகானை வாரித்தூற்றி மேதைகள் தங்கள் கண் முன்னே சமுதாயத்தை
பலவகையிலும் சுரண்டி தம் வழித்தோன்றல்களுக்கு சொத்து சேர்ப்பதை
தொழிலாக கொண்டு தம் தேவைக்காக நாட்டை நாசப்படுத்தும்
பணிகளை சிரமேற்கொண்டு திறம்பட செய்து வரும்
தலைவர்களை பார்த்து சொல்லட்டுமே துணிவிருந்தால்...?
ஒரு தலைமுறையையே சீரழித்ததுடன் அரசியல் நாகரீகத்தையும் புதை
குழிக்குள் கொன்று புதைத்து ஆனந்த கூத்தாடும் அரைகுறைகளை
விமர்ச்சியுங்களேன். வீடு தேடி ஆட்டோ வரும் என்று (அ)பயமா?.
அதை விடுத்து கண்ணியத்தோடு வாழ்ந்து மறைந்த ஒரு மகானின்
மறைவுக்கு பின் ஏசியதின் மூலம் இவர்களின் குறை மனம்தான்
வெளிச்சத்துக்கு வந்திருக்கிறதே தவிர அவர் புகழுக்கு எவ்வகையிலும்
களங்கமில்லை. இவ்வுலகில் மனிதராய் பிறந்த எவரும்
(தலைப்பை மீண்டும் சொல்கிறேன்)
விமர்சனங்களுக்கு விலக்கப்பட்டவர் அல்ல. இது அய்யா கலாம்
அவர்களுக்கும் பொருந்தும். ஆனால் விமர்சனம் என்ற பெயரில்
ஆதாரமில்லாத உப்புசப்பற்ற விஷத்தை கக்குவது பகுத்தறிவுக்கு உகந்த
செயலா சிந்திக்க வேண்டும்.
சிந்திப்பார்களா?
அய்யோ அதுக்கு மூளை வேனுமேன்றீங்களா? அதுவும் சரிதான்.


தங்கள் கருத்து சரியே அய்யா,
ReplyDeleteஇப்படியெல்லாம் விளம்பரம் தேடும் சாதி இவர்கள்.
நன்றி.
நண்பருக்கு வணக்கம் நானும் இந்தப்பதிவைப் படித்து மிகவும் வேதனைப்பட்டேன் பிறகு சகோ கீதா அவர்களிடம் சொன்னேன் பிறகு அவர்கள் தங்களிடம் சொல்லித்தான் தாங்கள் படித்து விட்டு இந்தப்பதிவை எழுதி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் அவர்களாக இது தவறென்று உணராதவரை யாராலும் இதை மாற்ற முடியாது நண்பரே
ReplyDeleteதங்களது தளத்தில் இணைக்க முடியாத காரணத்தால் எனக்கு தெரியவில்லை உண்மையிலேயே வருந்துகிறேன்
ReplyDeleteஇனி இதன் வழியில் வந்து போவேன் தகவலுக்கு நன்றி
ந்ல்லதொரு பதிவு சக்தி......போற்றுவார் போற்றட்டும்,....தூற்றுவார் தூற்றட்டும்.....நமக்கென்ன....நாம் நமது எண்ணங்களைத் தொடர்வோம்....சூரியனைப் பார்த்து ............................................நீங்களே முடித்துக் கொள்ளுங்கள்....அதை நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் அதில் சொல்லப்படுவது கூட மிக மிக அன்பான நன்றி உள்ள ஒன்று....
ReplyDeleteநான் அந்தப் பதிவைப் படிக்கவில்லை. உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.
ReplyDeleteதிறனாய்வு (விமர்சனம்) என்பது
ReplyDeleteமக்களுக்குப் பயன்தருவனவற்றை இனங்கண்டு
அவற்றைத் தருபவர்களை அடையாளம் கண்டு
வெளிப்படுத்துவதே!
முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html