வலைப்பதிவர் சந்திப்பு குறித்து பலரும் பல தகவல்களையும்
போதும் போதும்
என்கிற அளவுக்கு பதிந்து விட்ட போதும்
சில அனுபவங்களை கொண்டு
எனது ஆலோசனைகளை முன் வைக்கின்றேன்..
1) அரங்கிற்குள் புகைக்கு மட்டுமல்ல புகைப்படத்திற்கும் அனுமதி
கூடவே கூடாது... காரணம் கையில் புகைப்படக் கருவி (அல்லது கைபேசி)
இருக்கிறது என்பதற்காகவே தங்கள் விருப்பப்படி கண்டதையெல்லாம்
புகைப்படமாக எடுத்து வெளியிடுவதென்பது புதிதாக தோன்றி விட்ட ஒரு
கலாச்சாரமாக மாறிவிட்டது. இதனால் பதிவர்கள் நேரடியாகவும் விழா
நடத்துனர்கள் மறைமுகமாகவும் பெரிதும் பாதிக்கப்படுவர்..
2) வெளியூரிலிருந்து வரும் பதிவர்களுக்காகவே நடைபெறும் இவ்விழா
நடைபெறும் வளாகத்திற்கு வர தேவையான வழிகாட்டுதல் தொலை மற்றும்
அலைபேசி எண் (உடன் எளிதாக வர வாய்ப்பிருந்தால் வரைபடத்துடன்)
தருதல் நன்று இதனால் பதிவர்கள் சிரமம் குறையும்.
3) பதிவர் சந்திப்பு எனும் நிகழ்வு முழுமை பெற வேண்டி இதை பகிர்கிறேன்.
பல பதிவர்கள் தாம் விரும்பும் சில பதிவர்களை சந்தித்து அளவளாவலாம்
அல்லது அளவில்லாமல் உரையாடலாம் எனும் அவாவில் வருவர். அவர்தம்
எதிர்பார்ப்பை ஓரளவேனும் பூர்த்தி செய்ய சிறு இடைவேளைகள் குறைந்தது
இரண்டாவது தர வேண்டும்.
4) பதிவர் அனைவரும் மேடையேறி தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச
(வேண்டும் எனும் சிலர் குரல் கேட்கிறது ஆயினும்) வாய்ப்பு இருக்குமா?
எனவே அருள் கூர்ந்து பேச விரும்பும் பதிவர்களை மட்டும் மேடையில் பேச
அழைக்க வேண்டுகிறேன்.
5) பதிவர் சந்திப்பில் மேடையேறுபவர் பதிவர் தான் எனும் கட்டுப்பாடு
(விருந்தினருக்கு விலக்களிக்கலாம்) விழா நடத்துனர்களுக்கு
ஏற்படக்கூடிய தர்மசங்கடங்களை தவிர்க்கவே இந்த ஆலோசனை..
தங்களது ஆலோசனைகள் நன்றே நண்பரே இருப்பினும் புகைப்படம் எடுப்பது 80 இன்றைய சூழலில் தவிர்க்க முடியாத 1 ஆகிப்போனது 80 எமது தாழ்மையான கருத்து
ReplyDeleteநன்றி.
உடன் வருகைக்கு நன்றி மீசைக்காரரே.. புகைப்படம் எடுப்பது தவறு என்ற அர்த்தத்தில் சொல்ல வில்லை. நிகழ்ச்சி நடைபெறும்போது அனைவரும் புகைப்படம் எடுக்க முற்பட்டால் விழாவின் அழகு கெடும் என்பதுடன் மற்றவர்களுக்கு பல்வேறு வகையிலும் இடையூறாகிவிடும் என்றுதான் சொல்கிறேன். மற்றபடி விழா நடத்துனர்களின் அனுமதியுடன் தனியே புகைப்படம் எடுத்துக்கொள்வது தவறில்லை.
Deleteஅய்யா! தங்கள் கருத்தை கவனத்தில் கொள்வோம்!! பதிவுக்கு புதுகை விழாக்குழுவின் சார்பாக நன்றிகள் பல!
Deleteசரி...
ReplyDeleteநன்றி...
நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...
இணைப்பு : →பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"←
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
யோசனைகள் நன்று நண்பரே
ReplyDeleteநன்றி
நல்ல யோசனைகள் சக்தி! வரவேற்கின்றோம். புகைப்படம் அவரவர் தங்கள் விருப்பத்தில் பதிவர் நண்பர்களுடன் எடுத்துக் கொள்ளலாமே.
ReplyDeleteசரி உங்கள் தொடர் என்னாயிற்று?!! முதன்மையானது...? தொடருங்கள்..