மனசு...! சுத்தமாக
இருக்கு
மத்ததெல்லாம்...? இப்ப
எதுக்கு
குறைகள் நிலவிலும்
இருக்கு
அதனால் அதன் அழகில் இல்லை
இழுக்கு.
கூடி இழுத்த தேரில்
குற்றம் சொல்வது சுலபம்
அதனால் நம்மில் இங்கு
யாருக்கு லாபம்.
அறைக்குள் இருந்து
கொண்டே அடுக்கிடலாம் குறைகளை
கற்றுத் தெரிந்தால்தான்
நீக்கிட முடியும் கறைகளை.
யாரிட மில்லை குறை
இங்கே யாரிடமு ள்ளது நிறை
சொல்வதில் தேவை இங்கிதம்
அதுதான் நம் தேவை இங்கு நிதம்.
அறியாமல் நடந்த பிழைகளை
சுட்டுவது தவறு அல்ல..
அதற்க்காக சேர்ந்து
கொட்டுவது நியாயமே அல்ல.
இருக்கு
மத்ததெல்லாம்...? இப்ப
எதுக்கு
குறைகள் நிலவிலும்
இருக்கு
அதனால் அதன் அழகில் இல்லை
இழுக்கு.
கூடி இழுத்த தேரில்
குற்றம் சொல்வது சுலபம்
அதனால் நம்மில் இங்கு
யாருக்கு லாபம்.
அறைக்குள் இருந்து
கொண்டே அடுக்கிடலாம் குறைகளை
கற்றுத் தெரிந்தால்தான்
நீக்கிட முடியும் கறைகளை.
யாரிட மில்லை குறை
இங்கே யாரிடமு ள்ளது நிறை
சொல்வதில் தேவை இங்கிதம்
அதுதான் நம் தேவை இங்கு நிதம்.
அறியாமல் நடந்த பிழைகளை
சுட்டுவது தவறு அல்ல..
அதற்க்காக சேர்ந்து
கொட்டுவது நியாயமே அல்ல.
நன்றி...
ReplyDeleteகவிதை அருமையாக உள்ளது! முதல் இரண்டு பதிவர் சந்திப்பை முன் நின்று நடத்திய அனுபவம் எனக்குண்டு! அதுமட்டுமல்ல நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நான் பொதுவாழ்க்கையில் உழைத்துப் பெற்ற பக்குவம் இன்றும் எனக்குக் கை கொடுப்பதால் குறையோ நிறையோ எதுவானாலும் ஒன்றேன ஏற்றுக் கொள்ளப் முடிகிறது!
ReplyDeleteமிக்க நன்றி அய்யா வருகைக்கும் வாழ்த்துக்கும்
ReplyDeleteதங்கள் தடம் தொடர்ந்த பயனாகவே
தங்கள் வாழ்த்து கிடைக்கப் பெற்றேன்.
சிறியோன் என் பார்வையிலோ பதிவிலோ
குறையிருப்பின் பொருத்தருள்வீர்..
தங்கள் வாழ்த்துதலினாலேயே
என்னாலும் எழுதமுடியுமென நம்பிக்கை கொண்டேன்..
நன்றிகள் பல கோடி..
//சுட்டுவது தவறு அல்ல..
ReplyDeleteஅதற்காக சேர்ந்து
கொட்டுவது நியாயமே அல்ல.//
ரசித்தேன். கவிதை முயற்சி தொடரலாம் வாழ்த்துக்கள்