Wednesday, 29 July 2015

ஆடிப்பட்டம் தேடிய "க" விதை

இப்போதாவது கரை(றை)களைக் களைந்தால் என்ன?!





இன்று ஒரு மனித நேயம் மிக்க மகானுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.

என்ற பெயரில் தங்களது குடும்பத்தாரையும், கூட்டாத்தாரையும்,

அண்டிப் பிழைப்போரையும் சேர்த்துக் கொண்டு அந்தச் சிறிய தீவை மிதித்து

அழுக்காக்கி விடாதீர்கள்.  ஏற்கனவே அது குடிக்க நீர்கூட

இன்றி தவிக்கும் பூமி.  இந்நேரத்தில் கரைகள் அங்கு குவிந்து

அம்மாமனிதரின் அன்பைத் தவிர வேறு எதையும் எதிர்பாரா மக்களை 

எந்த வகையிலும் நோகடித்து விடாதீர்கள்.  அது ஒரு மிக

மிகச் சிறிய கூடு. தங்கள் செல்ஃபி எடுக்கும் செல்ஃபிஷ் தனத்தை அடக்கி

வைத்துக் கொண்டு, அவரது கனவை நனவாக்குவோம் என்ற ஒரு  சிறிய

அல்ல அல்ல சீரிய உறுதி எடுத்துக் கொண்டு அஞ்சலி செலுத்தி உடனடியாகத்

திரும்புவதன் மூலம் அன்னாருக்கு மற்றவர்களும் அவர் குடும்பத்தினரும்

அஞ்சலி செலுத்தவும் ஆறுதல் பெறவும் வாய்ப்பளிக்க  வேண்டுகிறேன். 

ஆடிப்பட்டம் தேடிய  விதைதான்.








seeds க்கான பட முடிவு








ஆடிப்பட்டம் தேடி விதைதான். 

ஆம் கலாம் அவர்கள் விதைதான். 

ஆடிப்பட்டம் தேடிய விதைத்தான். 

Monday, 8 June 2015

ஹைய்யோ மற(தி)த்தமிழங்களா

ஒண்ணு பாத்து சொல்லணும்

இல்லை பட்டு அறிந்து சொல்லணும்

யாரோ சொன்னாங்கன்னு

நம்பியார் அல்ல

நம் தம்பி யார் போல

தோற்றம் கொண்ட

ஒருவரை 

கண்டு உரைக்கிறார்

அவர் ம து ரை   தமிழனென்று

அது கண்டு சிலர் நகைக்கிறார்

யார் தமிழனென்று.

இதைத்தான்

நம்ம வள்ளுவர் அய்யா

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்

அப்டின்னும்

மக்கள் ஸ்டார்

(வருண்கால  அமெரிக்க ஜனாதிபதி அண்ணன்) கவனிக்க...,

ரசினி அண்ணன்

மாயா மாயா ன்னும்  

ஒலக நாயகன் கமல் 

மாயா மச்சிந்ரான்னும்  பாடி வச்சிருக்காங்க

போல???!!!

ஆமா ஒருத்தர்

நான்தான் அவர்னு

சொன்னா அப்பிடியேவா நம்பிடறது.

சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு.

 ஹைய்யோ மறதி தமிழங்களா!!! 

மன்னிச்சுக்கோங் க மறத்தமிழங்களா!!!












Tuesday, 2 June 2015

இப்பவே கண்ணை கட்டிடுச்சே


                                                                        
                                                            கண்கள் க்கான பட முடிவு


கண் பேசும் வார்தைகள் புரிவதில்லை....,
கண்ணும் கண்ணும் நோக்கியோ....,
கண்களின் வார்தைகள்புரியாதோ ... ,
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா ...,
கண்ணின் மணியே  கண்ணின் மணியே போராட்டமா ....,
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை,,,.
கண்மணியே பேசு மௌனமென்ன கூறு ....,
கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே ...,


இவன் சாதாரணமா பேசினாலே புரிய 2  மாசம் ஆகும்
அப்டி இருக்கும்போது இப்டி பேசுறானே வேலூர்ல வெய்யில்தான் குறைஞ்சிடுச்சுன்னு சொன்னாங்களே.? அப்புறம் என்ன பிரச்சினை அப்டின்னு மு..நி... சாமிக்கு வேணும்னா சந்தேகம் வரலாம்.. ஆனா மக்கழே ... (அந்த ழே .. உபயம் எங்கக்கா) உங்களுக்கு வரப்படாது..


எல்லா (பதிவர்) மக்களும் வேலுரை நோக்கி வருவதாக கனா கண்டேன்.
அந்த கனவின் பாதிப்புதான் இது.  இதுக்கே மீண்டும்
கண்ணை கட்டிடுச்சே
சரி சரி (சாரி) சாரி சாரியா வாங்க வாங்கன்னு முந்தி வந்து வரவேற்கிறேன்.  

Saturday, 2 May 2015

நாயும் நகுமே !

போராட
யாருக்கும்
உரிமையில்லை
எனும்
குறை மனம்
கொண்டவனில்லை
நான்

வாருங்களேன்
இவர்களுக்காக
நாமும்
சேர்ந்து
குரல் கொடுப்போம்

மருத்துவம்
எனும்
மா 'தவம்'
செய்வோர்
அச்சத்துடன்
பணியாற்றுதல்
அவர்க்கு மட்டுமல்ல
நமக்கும்
நல்லதல்ல.

இப்போது

மருத்துவம்  தேவைப்படுவது

மனிதர்களுக்கு மட்டுமல்ல

மருத்துவர்களுக்கும் தான் 

 

Thursday, 26 March 2015

சீச்சீய்..

கிரிக்கெட் க்கான பட முடிவு

 ம்ஹூம் இதெல்லாம் ஒரு விளையாட்டுன்னு உக்காந்து பாக்குற நேரத்துக்கு உருப்படியா வேற எதாவது வேலை இருந்த பாக்கலாம். சொன்னா யாரு கேக்குறாங்க. இப்ப பாருங்க எவ்வளவு பேருக்கு சங்கடம்.


அதே போலத்தான் கீழே உள்ள பழத்தையும் எப்படித்தான் சாப்பிட்டுராங்கன்னே தெரியலை. வாயில் வச்சாலே புளிக்கும் போல தெரியுது. அது என்ன பழம் அத எப்படி சாப்பிடுறது என்பது பத்தி யாராவது விளக்கமா பதிவிட்டால் நல்லாயிருக்கும். 



திராட்சை தோட்டத்து நரி க்கான பட முடிவு





பட்டைய கிளப்புங்க பாய்ஸ்



indiyan cricket team 2015 க்கான பட முடிவு 



இலக்கை நோக்கி செல்லும் படையே 
இனி எட்டிப்பிடிக்கும் தூரம்தான் 
கவனத்தை குவித்து 
வெற்றியுடன் கோப்பையை
வென்றுவா.

கிடைக்கும் ஒரு சின்ன சந்தர்பத்தையும் வீணாக்காமல் சொந்த நலனை விலக்கி அணியின் வெற்றியே முதன்மையானது எனும் சிந்தனையோடு
எதிர்கொள்ளும் வாய்ப்புகளை வெற்றிக்கு திறவுகோலாக மாற்று.
நிச்சயம் முடியும் என்கிற நம்பிக்கையோடு  விளையாடு. தொடர் வெற்றி என்பது அவர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. கங்காருவை அதன் இருப்பிடத்தில் மோதி வெல்வதைக்காண உன் 100 கோடிக்கும் மேற்பட்ட உறவுகள் காத்திருக்கிறோம்.