போன வாரம்
ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது... அவரைப்பற்றி பிறகு விரிவான பதிவு.. வேரொரு நீண்ண்ண்.....ட பதிவு ... பதிவர் ------------ மூலமாக வரும்...
இப்போது சம்மந்தப்பட்டவரைப்பற்றி சில ரகசிய தகவல்களைப் பற்றி மட்டுமே தரப்போகிறேன்!!!.
1) பொதுவாக ஒரு வீட்டில் கணவர், குழந்தைகள் ஆகியோர் சாப்பிட்டார்களா என்பதைப் பற்றி கவலையே! படாமல் வீட்டில் நுழைந்ததும் தான்பாட்டிற்க்கு சாப்பிடும் ஒரு பெண்மணியை யாரேனும் கேள்விப்பட்டதுண்டா...
2) பெற்ற பிள்ளையிடமே பேராசைக்காரர் என்று பட்டம் பெற்ற தாயை கண்டதுண்டா?
3) ஒவ்வொரு பைசாவிற்க்கும் கணக்கு பார்க்கும் விவரமான அம்மாவை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் என்ன சொல்வீர்கள்?.
4) கணவர் மறைந்தநிலையில் அழக்கூட நேரமில்லாதவரை அறிந்ததுண்டா?..
அப்படிப்பட்ட ஒருவரை சந்தித்தேன்..
அதுவே நான் பதிவரானதால் 'கண்ட' பலன்.
ம்... நீங்கள் கொடுத்து வைத்த பதிவர்...!
ReplyDeleteம்ம் நீங்க இப்படி சொல்லுறீங்க
ReplyDeleteமத்த பெரியவங்க என்ன சொல்லப்போறாங்களோ
அதுதான் இப்ப என்னோட கவலை..
பறவையாக வந்து பின்னூட்டமிடும் தங்கள் பாங்கு தனித்துவமானது. நன்றி அண்ணாச்சி...
இப்படியும் ஒரு பதிவரா?
ReplyDeleteஎன்ன நண்பரே சஸ்பென்ஸில் விடுகிறீர்களே
உண்மைதான் அய்யா.. அவர் பதிவர்தான்.. ஆனால்,,, வலைப்பதிவர் அல்ல
ReplyDeleteஅவரைப்பற்றி எந்த புகழுரையும் சொல்லக்கூடாது என்று எனக்கு நானே விதித்துக்கொண்டுள்ள கட்டுப்பாடு உங்களைப் போன்றவர்களின் அன்பால் உடைந்துவிடும் போலிருக்கிறதே?.
நியாயமாக தங்களைப்போன்றவர்கள் அவரை சந்தித்திருக்க வேண்டும். சரி உங்கள் அன்புக்காக இன்னொரு ரகசியத்தை பகிர்கிறேன்,, அவருக்கு வயது.....?
அதிகமில்லை 89 தான்... இதற்க்குமேல் எதுவும் கேட்காதீர்கள் அய்யா..
வயது 89 அப்பாடா நான் அவர் இல்லை
ReplyDeleteஆஹா நினைத்'தேன்' வந்'தாய்'100 வயது என்று சொன்னால் சும்மா புளுகுறாண்யா என்று மற்றவர்கள் நினைப்பார்கள் உங்களிடம் பேச வேண்டுமென்று 4 நாட்களுக்கு முன்பே வேறு ஒரு பதிவரிடம் சொல்லியிருந்தேன். இன்றைய உங்கள் பதிவை யாரிடம் கொடுத்து சரி பார்க்க சொன்னீர்களோ!! அவரே வலிந்து எனக்கு தங்களின் இன்றைய பதிவு பற்றி சொன்னார். இதைவிட எனக்கு வேறென்ன அங்கீகாரம் வேண்டி இருக்கு...
ReplyDeleteஅப்படியா....?????
ReplyDeleteவலிப்போக்கரே
ReplyDeleteதாங்களோ வலி வேறு
வழி வேறு எனும் கொள்கையுடன்
ஓர் வழியில் செல்பவர்..
நானோ
எனக்கு ஏற்படும் வலிபோலத்தானே
மற்றவர்களுக்கும் இருக்கும்
எனும் (வலி தந்த) வேறு வழியில்
செல்ல முற்படுபவன்..
ஆயினும் நம்
உணர்வு ஒன்றுதான்
நம்மை
இணைத்தது அன்புதான்.
யாராக இருந்தாலும்
தாய் பற்றுக் குறையாது.
ஏனெனில் அவள்
பத்தறை மாற்று தங்கம் மட்டுமில்லை..
பிள்ளைகளை பொறுத்தவரை பற்றற்ற தங்கம்...
அந்த பதிவர் பற்றி ஓர் ஊகம் இருக்கிறது! அறிய ஆவலாய் காத்திருக்கிறேன்!
ReplyDeleteஉங்களையும்,உங்கள் நடையையும்(எழுத்துநடை)இன்னும் ரசிக்க எனக்கு பயிற்சி தேவைப்படுகிறது....உங்கள் குருகுலத்தில் வாய்ப்பிருப்பின்....என்ன ஒரு விறுவிறுப்பு....காத்திருக்கவைப்பதில் .......ஆவலாய் இருக்கிறேன்
ReplyDeleteஅய்யா சாமி நானொன்னும்
Deleteஆலினால் அப்பாடக்கர் (அழகு சுந்தரம்)
எல்லாம் இல்லை. எனக்கு (தெரிந்த) தமிழில்
ஏதாவது சொல்லனும் எனு மாசை கொண்ட தால்
ஏதோ சொல்ல முற்படுகிறேன்..
சில தகவல்களை எப்படி சொல்வதென்ற மலைப்பிலேயே
பாதியில் பாத்தி கட்டி வைத்துள்ளேன்.
அதற்க்கும் நேரம் வர வேண்டும் அல்லவா?
காத்திருத்தல் பல நேரங்களில் கொடுமையாய் தெரிந்தாலும்
அதன் பலன் பெறும்போது அருமையாய்.. தெரியும்...
கொஞ்ச நாள் பொறுங்க தலைவரே....
யாராயிருக்கும்...ஆங்...தொடர்கிறேன் அய்யா என்னுடைய வலைப்பூ ethilumpudhumai.blogspot.in...
ReplyDeleteமாப்ள ஸ்ரீ சவுக்கியம்தானே..?
Deleteஎங்க புதுவை சந்திப்புக்கு பிறகு
விதைகளை பற்றி எதுவும் பதியக்காணோம்.?