தாமிரபரணியை காக்க களம் காணும் இளைஞர்களுக்கு முதல் வணக்கம்.
ஆறில்லா ஊருக்கு அழகு பாழ். என்ற மூத்தோர் சொல்லை கவனத்தில் கொள்ளாத குற்றத்தின் தண்டனையை இதோ நாங்கள் அனுபவிக்கிறோம்.
இங்கே அந்நியனுக்காக காலணி தயாரிக்க எம் மவர் எடுத்திட்ட ஊசி, முதலில் பாய்ந்தது ஏழை விவசாயியின் கண்ணில்தான்.
அன்று எம் முன் னோர் கண்டிக்க தவறியதன் விளைவு, இதோ
இங்கு நம் கண் முன்னர் மண்ணை மலடாக்கி, நண்ணீரை நஞ்சாக்கி, இயற்கை காற்றை விஷ வாயு வாக்கி விவசாயியை தன் மண்ணிலே அகதியாக்கியது தான் நம் அரசியலாளரின் அரை நூறாண்டு கடத்திய சாதணை.
இது தொடர்ந்திட அனுமதித்தால்...?
நம் அடுத்தலை முறையின் அழிவுக்கு தோரணம் கட்டும் பாவம் செய்தோராவோம்.
பாலாற்றை மீட்டெடுப்போம். விவசாயிகளை காப்போம்.