போன வாரம்
ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது... அவரைப்பற்றி பிறகு விரிவான பதிவு.. வேரொரு நீண்ண்ண்.....ட பதிவு ... பதிவர் ------------ மூலமாக வரும்...
இப்போது சம்மந்தப்பட்டவரைப்பற்றி சில ரகசிய தகவல்களைப் பற்றி மட்டுமே தரப்போகிறேன்!!!.
1) பொதுவாக ஒரு வீட்டில் கணவர், குழந்தைகள் ஆகியோர் சாப்பிட்டார்களா என்பதைப் பற்றி கவலையே! படாமல் வீட்டில் நுழைந்ததும் தான்பாட்டிற்க்கு சாப்பிடும் ஒரு பெண்மணியை யாரேனும் கேள்விப்பட்டதுண்டா...
2) பெற்ற பிள்ளையிடமே பேராசைக்காரர் என்று பட்டம் பெற்ற தாயை கண்டதுண்டா?
3) ஒவ்வொரு பைசாவிற்க்கும் கணக்கு பார்க்கும் விவரமான அம்மாவை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் என்ன சொல்வீர்கள்?.
4) கணவர் மறைந்தநிலையில் அழக்கூட நேரமில்லாதவரை அறிந்ததுண்டா?..
அப்படிப்பட்ட ஒருவரை சந்தித்தேன்..
அதுவே நான் பதிவரானதால் 'கண்ட' பலன்.
இது மாதிரி கூவி கூவித்தான் நம்மளை ஒழித்தார்கள். அது சரி புலி என் புறப்பட்டு வான்ன என்ன அர்த்தம் அய்யா! சரி! புலி எப்படி புறப்படும் என்று யாரும் பள்ளியில் எங்களுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை...கூடவே கொஞ்சம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
புலியென புறப்பட்டு வா! சிங்கமென சீறி வா
.
பசு போல அசைந்து வா!
பாம்பென படமெடுத்து வா!
குரங்கு போல் சொரிந்து வா!
குதிரை மாதிரி கனைத்து வா!
யானை போல பிளிறிகிட்டு வா!
கழுதை போல உதைத்து கொண்டு வா!
பல்லி போல் ஒட்டிக்கிட்டு வா!
பறவை போல பறந்து வா!
நாய் போல ஒரு காலைத் தூக்கி வா!
ஆனால்......என்ன ஆனால்?
ஆனால், பதிவர் கூடத்திற்கு, எக்காரனத்தைக் கொண்டும்...
மனிதன் மாதிரி வராதே!