Monday, 21 July 2014

வணக்கம் பண்ணையாரே வாங்க வாங்க பழகலாம்

வேலூரில் வெய்யிலின் தாக்கம் கொஞ்சம் குறைந்துள்ளது. இந்த சூழலில் எப்போதும் மற்றவர்களின் குறைகளை சுட்டி (இல்லையில்லை) குட்டி காண்பிப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கும். என் மதிப்பு மிக்க ஒரு நண்பர். பெயரெல்லாம் வேண்டாமே. இப்போதைக்கு பண்ணையார் என்று வைத்துக்கொள்வோம். சாதாரணமாக வணக்கம் வைத்தால் கூட ம்கூம் நீ வணக்கம் வைத்துத்தான் நான் பெரியாளாக வேண்டிய நிலையில் இல்லை. நான் ஏற்கனவே பெரிய ஆள் தெரியுமா என்கிற தொனியில் பேசுபவர். 

இன்று என் நேரம். ரயிலடியில் காத்திருந்தேன் என் நண்பர் ஒருவரின் வருகைக்காக, ரயில் வருவதாக தெரியவில்லை. ரயில் தாமதமாக வருவதற்கான அறிவிப்பு மட்டும்தான் அதுவும் இரண்டு மணி நேரம். தாமதம் என்று அறிவிக்கப்பட்டது. அப்போதுதான் நம் பண்ணையார் தூரத்தில் வருவது கண்டு அதிர்ந்தேன். வேறு இடமாக இருந்திருந்தால் ஓடி ஒளிந்திருப்பேன். ஆனால் இப்போது தப்பிக்க முடியாத நிலை. காரணம் அவர் வரும் பாதையில் உள்ள வாகன நிறுத்தத்தை தாண்டித்தான் நான் போக முடியும். மேலும் அவருக்கும் எனக்கும் நன்கு அறிமுகமான ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர் என்னை கவனித்துவிட்டனர். அவரிடம் பேச்சுவாக்கில் என் இருப்பை பற்றி சொல்லிவிட்டால்?. என்ன செய்வதென்று யோசிக்கின்ற நேரத்தில் பண்ணையார் உரத்த குரலில் கைபேசியில் பேசியபடி வந்து கொண்டிருந்தார்.. எப்படி தப்பிப்பது யாராவது தெரிந்தால்
சொல்லுங்களேன்..     

Thursday, 5 June 2014

உயிர் கொடுத்து ஒரு பாடம்

உயிர் காக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற உறவுகளுடன் வந்த அந்த குழந்தையின் பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் ஆறுதல் சொல்ல யாராலும் முடியாது. அவர்களின் கனவுகளை காவு கொண்டது மழை வெள்ளமல்ல. சாக்கடையை விட மோசமான அரசியலும் ஊழலும்தான்.

பெருமை பொங்க சொல்லிக்கொண்டார்கள் பாதாள சாக்கடை திட்டம் என்று
அந்த மேதைகளுக்கு உணர்த்தத்தான் இக்குழந்தை வெளி மாநிலத்திலிருந்து இங்கு வந்ததோ?. ஒரு அவசர காலத்திற்க்கு உள்ளே இறங்கும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அடைத்து கொண்டால் சரிசெய்ய உள்ளே இறங்கும் நபரின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்கிற குறைந்தபட்ச அறிவு கூடவா இருக்காது.

இந்த சாக்கடையை தோண்டுவது மட்டும் போதாது.
ஆக்கிரமிப்பை அகற்றுவது மட்டும் தீர்வாகாது.
கால்வாயின் மேல் உள்ள ஆக்கிரமிப்புகளை தயவு தாட்சன்யமின்றி அகற்றுவதோடு அவர்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும்.

குப்பனும் சுப்பனும் செய்கின்ற சிறு பிழைகளுக்கு தண்டனை தரும் சமுதாயம். இப்படி கண்மூடித்தனமாக வளைக்கும் பெரிய மனிதர்களை கண்டு பயத்துடன் ஒதுங்கி செல்வதுதான் உண்மை.
இவர்களுக்கு பரிந்துகொண்டு ஆதரவாக எந்த கட்சி வந்தாலும் அவர்கள் முகத்திரையையும் கிழிக்க வேண்டும். மக்களின் வாக்குகளை பெற வரும்போது மட்டும் பிச்சைகாரர்கள் போல் நின்று விட்டு வென்றதும் அமைதிப்படைஅமாவாசைகளாய் மாறிய மனிதர்களும் இனியாவது திருந்த வேண்டும்.

இதையெல்லாம்தான் அந்த மகள் தன் உயிரை தந்து உணர்த்திவிட்டாள்.

மாற்றம் ஒன்று வர வேண்டும் என்று பேசினால் மட்டும் போதாது.
அந்த மாற்றம் நம்மிடமிருந்துதான் துவங்க வேண்டும் என்பதே  உண்மை.





Tuesday, 1 April 2014

ச்சிரிப்பு வருது ச்சிரிப்பு வருது ச்சிரிக்கச்சிரிக்க ச்சிரிப்பு வருது!

சகோ T.N.M. சொன்னது போலவே நடக்குது பாருங்க!
முக்கியமாய்..முக்கியமாய்.. என்ன நடந்தாலும் இந்த ....... பிடிச்ச அரசியல் மட்டும் உவ்..,(வே ).ண்டாம்னு விலகிப்போக நினைத்தாலும் ,. அது நம்மை விட்டு விலகுவதாகவும் இல்லை. நம்மை  - விடுவதாகவும் இல்லை.

Tuesday, 24 December 2013

குருக்களுக்கு வந்தனம்


FUf;fSf;F te;jdk;

,izaj;jpy;,
vd;id gjpg;gpj;J (GJg;gpj;Jf;nfhs;sTk;jhd;) nfhs;s,
Njb te;Njd;.
fisj;J
,isj;J mkh;e;Njd;.rNfh
xUthpd; gjpTfis ghhj;‘Njd;’;
gbj;‘Njd;’
kfpo;e;;‘Njd;’
urpj;;;‘Njd;’
mthpd; gjpthy; kw;nwhU rNfh tpd; gjpTf;F ,lk; ngah;e;‘Njd;’;. mthpd; gjptpy; 
Kfpo;e;;‘Njd;’
mtud;gpy; nefpoe;;‘Njd;’;.
mthpd; mh;g;gzpg;G fz;L 
mfkfpo;e;;‘Njd;’.

jl;rid ,y;yhj 
gf;jid fz;L Kfk; Rspf;fhj
flTs; ,Ug;gpd; mtiu
FU vd;Ngd;.
mtNu xd;wph;f;F Nkw;gl;bUg;gpd; mth;fis
FUf;fs; vd;Ngd;.

vd;id
tu itj;j
tuq; nfhLj;j
top fhl;ba
top elj;j NghFk; Kfkw;w
vy;yh

FUf;fSf;Fk; te;jdk;


Friday, 20 December 2013

அன்பே சிவம்

அன்புக்குரிய சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம்.
இது இன்று பிறந்த ஒரு குழந்தையின் பக்கம். உங்கள் அன்புடன் ஆதரவையும் அளந்து தராமல் அள்ளித்தருவீர்கள் என்ற நம்பிக்கையுடனும். குறைகள் இருப்பின் தரும் ஆலோசனைகளையும் பெற்று அனைவர் மனதையும் மகிழ்விக்க இன்று
புதிதாய் பிறந்த
பூதம் முயலும்.
நன்றி
அன்பே சிவம்

இன்று புதிதாய் பிறந்தது பூதம்



நண்பர்களே!
புதிதாக வலைப் பதிவு தொடங்கி இருக்கிறேன். என் மனதில் தோன்றியவற்றை எழுத இருக்கிறேன். வலைப் பதிவுக்கு புதியவன் என்பதால்  ஆலோசனைகளும் ஆதரவும் அளிக்கும்படி கேட்டுக்  கொள்கிறேன் 

நன்றி வணக்கம்

அன்புடன் 

சிவம்