உயிர் காக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற உறவுகளுடன் வந்த அந்த குழந்தையின் பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் ஆறுதல் சொல்ல யாராலும் முடியாது. அவர்களின் கனவுகளை காவு கொண்டது மழை வெள்ளமல்ல. சாக்கடையை விட மோசமான அரசியலும் ஊழலும்தான்.
பெருமை பொங்க சொல்லிக்கொண்டார்கள் பாதாள சாக்கடை திட்டம் என்று
அந்த மேதைகளுக்கு உணர்த்தத்தான் இக்குழந்தை வெளி மாநிலத்திலிருந்து இங்கு வந்ததோ?. ஒரு அவசர காலத்திற்க்கு உள்ளே இறங்கும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அடைத்து கொண்டால் சரிசெய்ய உள்ளே இறங்கும் நபரின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்கிற குறைந்தபட்ச அறிவு கூடவா இருக்காது.
இந்த சாக்கடையை தோண்டுவது மட்டும் போதாது.
ஆக்கிரமிப்பை அகற்றுவது மட்டும் தீர்வாகாது.
கால்வாயின் மேல் உள்ள ஆக்கிரமிப்புகளை தயவு தாட்சன்யமின்றி அகற்றுவதோடு அவர்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும்.
குப்பனும் சுப்பனும் செய்கின்ற சிறு பிழைகளுக்கு தண்டனை தரும் சமுதாயம். இப்படி கண்மூடித்தனமாக வளைக்கும் பெரிய மனிதர்களை கண்டு பயத்துடன் ஒதுங்கி செல்வதுதான் உண்மை.
இவர்களுக்கு பரிந்துகொண்டு ஆதரவாக எந்த கட்சி வந்தாலும் அவர்கள் முகத்திரையையும் கிழிக்க வேண்டும். மக்களின் வாக்குகளை பெற வரும்போது மட்டும் பிச்சைகாரர்கள் போல் நின்று விட்டு வென்றதும் அமைதிப்படைஅமாவாசைகளாய் மாறிய மனிதர்களும் இனியாவது திருந்த வேண்டும்.
இதையெல்லாம்தான் அந்த மகள் தன் உயிரை தந்து உணர்த்திவிட்டாள்.
மாற்றம் ஒன்று வர வேண்டும் என்று பேசினால் மட்டும் போதாது.
அந்த மாற்றம் நம்மிடமிருந்துதான் துவங்க வேண்டும் என்பதே உண்மை.

பயணம் சிறப்பாக தொடரட்டும்...
ReplyDeleteதொடங்குங்கள் வெற்றி உமதே...
ReplyDeleteநன்றி சகோ கடந்த சில தினங்களாக கணினி ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்து விட்டதால் பதிலளிக்க தாமதமாகிவிட்டது. மன்னிக்கவும்.
Delete