Sunday, 8 March 2015

மகளிர் தினத்துக்கு வாழ்த்தாதீர்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYlGpgxbSVYVIe-sr0wNcxOAm81UfbIOIRvYZ1lORRryfTrInPoz1hlMPGanVYfx-EoZGwlvNUtcTi_YHNF1PPuC9mHYB6f18efQdMb7D6fH2IhSpNDMBdT4KiXCVOyoERngHkgnv0F0m1/s640/554228_4849669046062_1045732471_n.jpg

தாயை,
சகோதரியை,
மனைவியை,
மகளை,
நேசிப்பவர்கள்
மகளிர் தினத்துக்கு மட்டும்
கடனே என்று
வாழ்த்தாதீர்கள்.
கடமைக்கு
வாழாதீர்கள்.  

நம்மை
உருவாக்குவதில் இருந்து
எருவாகும்வரை
தங்களையே
உருக்கி தரும்
அவர்களை
மதிப்போம். 
தினம்தினம்
துதிப்போம்.
 

Tuesday, 24 February 2015

நாங்கள்ளாம் அவ்ளோ ஒர்த் இல்லைய்யா. சொன்னா கேளுங்க.

இப்படிக்கு
உங்களால் தினசரி
வணங்கப்ப(ட்)டு ம் வேதனைப்படும்
க
ட
வு
ள் க ள்.  

Friday, 20 February 2015

ஹைய்யோ மு.. நி.... சாமி வாக்கு பலிச்சிடுச்சே!

பதிவுலகில் தனக்கென்று ஒரு பாதையை வகுத்து வைத்திருந்தாலும்
மற்ற (பதி)வர்கள் மனம் கோணக்கூடாது என்(ற) பகுத்தறிவு சிந்தை மு நி சாமி சொன்ன ஆருடம் பலித்து விடுமோ என்று கொஞ்சமே கொஞ்சம் பதட்டமாயும்...,   ரொம்ப ரொம்ப சந்தோஷமாயும் இருக்கு.. ஸ்ஸ் ஸ்.. ப்ப்  பூ   ... ர்.... தி

Sunday, 8 February 2015

விடுதலை வழங்கியமைக்கு நன்றி

மாப்பிள்ளை முறுக்கு போல்
முறுக்கிக்கொண்ட
கோவை (இல்லை இல்லை)
கோவக்கார பதிவர் அய்யா
பழனி.கந்தசாமி அவர்கள் 
மீண்டும் தமது தளத்தில் பின்னூட்டப்பெட்டியை திறந்து
கருத்து சுதந்திரத்திற்கு எதிரான கந்தசாமி அல்ல என்பதை நிரூபித்துள்ளார்.
வாழ்த்துகளுடன் அவருக்கு நன்றி. 
 

Friday, 6 February 2015

உண்மையானவன் யார்

மீசைக்காரரின் நண்பா
இது
உம்மைப்பற்றிய பக்கமும் அல்ல.
உம்மை பற்றி வரு (டு) ம் பக்கமும் அல்ல.

ஒரு அறிவாளி
ஒரு சமூகத்தையே முட்டாளாக்க முடியும்.

அதுக்காக
ஒரு முட்டாள்
ஒரு சமூகத்தையே அறிவாளி ஆக்க முடியுமா?.

ஒரு முட்டாளிடம் 1000 அறிவாளிகள்
ஏவல் பணி செய்தாலும் அவர்களும் முட்டாள்களே.

ஆனால்

அதே நேரத்தில்

ஒரு அறிவாளியிடம் 1000 முட்டாள்கள்
பணிபுரிந்தாலும் அவர்களும் அறிவாளி
என்று எந்த அறிவாளியும் சான்றளிக்க மாட்டார்.

இதுதான் இன்றைய நிலை.



 


Thursday, 29 January 2015

தலைப்பில் 1ம் இல்லை

ஒரு வழியாக
ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த
ஒரு இலக்கிய?சிந்தனை நிரம்பிய ஆராய்ச்சி கட்டுரை (அ) பதிவு பற்றி தமிழ் பதிவுலகில் உள்ள
நண்டு சிண்டு முதல் பல பெருந்தலைகள் வரை அனைவரும்
சுவைத்து, துவைத்து,
அலசி, பிழிந்து, கசக்கி, கிழித்து, காய வைத்து, தொங்க விட்ட பிறகும் நான் அது பற்றி பேசாமல் இருந்தால்
விக்ரமாதித்யனின் வேதாளம் சொல்வதுபோல
என் 1 தலை சுக்கு 100 ஆகி விடுமோ என்ற அச்சம் காரணமாகவும், பதிவுலகில்
(இது வரையும் பெரிதாக எந்த ஆணியும்  பிடுங்காத )
நான் இது பற்றி கருத்து பதியா விட்டால் பிற்காலத்தில் என் தலைமுறை பலரின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி வருமே என்பதுடன்
கருத்து சுதந்திரம் பற்றி
க கூ மு கூ  மு
என்ற அவப்பெயரை  சுமக்க வேண்டி வருமே
என்கிற கவலையுடன்  இதையெல்லாம் அனுமதிக்கவே கூடாது என்ற சமூக அக்கறையுடனும் சிந்தித்ததன் விளைவே எனது முந்தைய பதிவு?!
 அல்ல அல்ல
பதிவின் தலைப்பு 

அது பற்றி
"குறைந்தபட்ச நேர்மை' உள்ள வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பதிய வேண்டும் என்ற நிலையில் திடீரென
என்
மதிப்பிற்குறிய
ஒரு
பதிவரின்
திடீர் (தலை) மறைப்பு
செய்'தீ' கேட்டு கெட்ட கோபம் கொண்டுள்ளேன்.
இதுதான் பதிவுலகம் என்றால்
எனக்கு இந்த
(பதிவு) உலகம் வேண்டாம்.
என்றும்  சொல்ல முடியும்
ஆனால்
அவர் விலக சொல்லும் காரணம்  சரி இல்லை.
அனுபவமும் வயதும் தராத
பாடமா அவருக்கு மற்றவர் சொல்லி தர உள்ளது.