Friday, 6 February 2015

உண்மையானவன் யார்

மீசைக்காரரின் நண்பா
இது
உம்மைப்பற்றிய பக்கமும் அல்ல.
உம்மை பற்றி வரு (டு) ம் பக்கமும் அல்ல.

ஒரு அறிவாளி
ஒரு சமூகத்தையே முட்டாளாக்க முடியும்.

அதுக்காக
ஒரு முட்டாள்
ஒரு சமூகத்தையே அறிவாளி ஆக்க முடியுமா?.

ஒரு முட்டாளிடம் 1000 அறிவாளிகள்
ஏவல் பணி செய்தாலும் அவர்களும் முட்டாள்களே.

ஆனால்

அதே நேரத்தில்

ஒரு அறிவாளியிடம் 1000 முட்டாள்கள்
பணிபுரிந்தாலும் அவர்களும் அறிவாளி
என்று எந்த அறிவாளியும் சான்றளிக்க மாட்டார்.

இதுதான் இன்றைய நிலை.



 


Thursday, 29 January 2015

தலைப்பில் 1ம் இல்லை

ஒரு வழியாக
ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த
ஒரு இலக்கிய?சிந்தனை நிரம்பிய ஆராய்ச்சி கட்டுரை (அ) பதிவு பற்றி தமிழ் பதிவுலகில் உள்ள
நண்டு சிண்டு முதல் பல பெருந்தலைகள் வரை அனைவரும்
சுவைத்து, துவைத்து,
அலசி, பிழிந்து, கசக்கி, கிழித்து, காய வைத்து, தொங்க விட்ட பிறகும் நான் அது பற்றி பேசாமல் இருந்தால்
விக்ரமாதித்யனின் வேதாளம் சொல்வதுபோல
என் 1 தலை சுக்கு 100 ஆகி விடுமோ என்ற அச்சம் காரணமாகவும், பதிவுலகில்
(இது வரையும் பெரிதாக எந்த ஆணியும்  பிடுங்காத )
நான் இது பற்றி கருத்து பதியா விட்டால் பிற்காலத்தில் என் தலைமுறை பலரின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி வருமே என்பதுடன்
கருத்து சுதந்திரம் பற்றி
க கூ மு கூ  மு
என்ற அவப்பெயரை  சுமக்க வேண்டி வருமே
என்கிற கவலையுடன்  இதையெல்லாம் அனுமதிக்கவே கூடாது என்ற சமூக அக்கறையுடனும் சிந்தித்ததன் விளைவே எனது முந்தைய பதிவு?!
 அல்ல அல்ல
பதிவின் தலைப்பு 

அது பற்றி
"குறைந்தபட்ச நேர்மை' உள்ள வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பதிய வேண்டும் என்ற நிலையில் திடீரென
என்
மதிப்பிற்குறிய
ஒரு
பதிவரின்
திடீர் (தலை) மறைப்பு
செய்'தீ' கேட்டு கெட்ட கோபம் கொண்டுள்ளேன்.
இதுதான் பதிவுலகம் என்றால்
எனக்கு இந்த
(பதிவு) உலகம் வேண்டாம்.
என்றும்  சொல்ல முடியும்
ஆனால்
அவர் விலக சொல்லும் காரணம்  சரி இல்லை.
அனுபவமும் வயதும் தராத
பாடமா அவருக்கு மற்றவர் சொல்லி தர உள்ளது.
  


Sunday, 2 November 2014

நாலு பேரு நல்லா இருக்கனும்னா !?

நாலு பேரு நல்லா இருக்கனும்னா !?
தப்பில்ல.. எதுவும் தப்பில்ல
அப்டின்னு வேலு நாயக்கர் சொன்னதை நம்பி..!
கீழ்கண்ட பதிவை 
COPY & PAST செய்து வெளியிடுகிறேன். இதில் எனக்கு வெட்கமே இல்லை..

ரத்த சேவைக்காக ஓர் இணையதளம் - தெரிந்து கொள்வோம்.

அவசரமாக இந்தக் குரூப் ரத்தம் தேவை என்கிற குறுஞ்செய்தியோ அல்லது மெயிலோ வந்தால் அதை ஈஸியாகப் பார்வேர்டு செய்துவிட்டு போகிறவர்கள்தான் இன்று அதிகம். ஆனால், அவசரத் தேவைக்கு ரத்தம் கொடுக்க முன்வருபவர்கள் மிகக் குறைவுதான்.

இந்த நிலையை மாற்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷெரீப் என்கிற இளைஞரின் முயற்சியால் தொடங்கப்பட்ட, friends2support.org என்ற இணையதளம், அகில இந்திய அளவில் ரத்த தேடலுக்கான ஒரே இணையதளம் என்பது குறிப்பிடத்தக்கது.
“ரத்தம் தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். ரத்தம் கிடைக்காமல் யாரும் உயிரிழந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். ‘Each One- Reach One’ என்பதே எங்கள் நோக்கம்” என்கிறார் friends2support.org என்ற இணையதளத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார்.

“இந்த இணையதளத்தைத் தொடங்கிய ஷெரீஃப், ஐதராபாத்தைச் சேர்ந்தவர். ஐதராபாத்துல குறிப்பிட்ட ரத்த குரூப் கிடைக்காமல், வரிசையா உயிர்கள் பலியான கோர சம்பவம் அவரை, ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணிருக்கு. ரத்தம் கிடைக்காம இறக்குறவங்க இனியும் அதிகரிக்கக் கூடாதுங்கிறதுக்காக, இந்த இணையதளத்தை ஆரம்பிச்சார்.
ஆரம்பிக்கும் போது வெறும் 200 பேர் தான் இருந்தாங்க. அதுவும் அவங்க எல்லாரும் ஷெரீஃபோட ப்ரெண்ட்ஸ்தான். எதுவும் தொடங்கும்போது உடனே வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்க்க முடியாது. அதனால தொடர்ந்து செயல்பட்டார். சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் வழியாக ரத்த சேவை குறித்து தெரிய வந்ததும் நிறைய நண்பர்கள் ரத்தக் கொடையாளர்களாக இணைஞ்சாங்க. இப்போ, இந்த இணையதளத்தில் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்கள், மாவட்டங்கள், தாலுகா தலைமையகங்கள், முக்கிய நகரங்கள்னு அனைத்தையும் பதிவு செஞ்சிருக்கோம்.
ஒவ்வொரு நகரத்திலும் உள்ள குருதிக் கொடையாளர்கள் அவர்கள் எந்தக் குரூப் ரத்தத்தைச் சேர்ந்தவங்க, அவங்க செல்போன் நம்பர் உட்பட இணையத்தில் பதிவு செய்யும் வசதி இருக்கு. இந்த வசதியைப் பயன்படுத்தி இந்தியாவுல எங்க இருந்து வேணும்னாலும் எந்த வகை ரத்த தானம் செய்பவர்களையும் இடைத்தரகர்கள் இல்லாமல் உடனடியாகத் தொடர்பு கொண்டு ரத்த தானம் பெற முடியும்.
அதேசமயம், ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள ரத்த தான அமைப்புகள் எங்களுக்கு உதவி செஞ்சாங்க. கிட்டத்தட்ட எங்களோட இணையதளம் மூலம் இதுவரை சுமார் 2 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கு. 1.5 லட்சம் பேர் ரத்தக் கொடையாளர்களாக இருக்காங்க.

எங்க இணையதளத்துல ஒரு முறை ரத்தம் கொடுத்தா, அப்போதிலிருந்து 90 நாட்களுக்கு அவங்களோட பெயர் தானாகவே இணையதளத்துல இருந்து நீக்கப்பட்டுவிடும். அதேபோல், 90வது நாள் அந்த நபருக்கு, ‘நாளை முதல் நீங்கள் ரத்த தானம் செய்யலாம்’ என மெசேஜூம் போய் விடும். இணையதளத்துலயும் அவங்க பேர் இருக்கும்.

அதே மாதிரி, யார் ரத்த தானம் செய்யலாம், ரத்தம் எவ்வளவு நாளுக்கு ஒரு முறை தரணும். ரத்த தானம் செஞ்ச பிறகு என்ன செய்யணுங்கிற விழிப்புணர்வை தகுந்த நிபுணர்களை வெச்சு, பள்ளி, கல்லூரிகளில் முகாம்கள் நடத்தி வருகிறோம்.
ஒரு சிலர் ரத்தம் கொடுக்கிறேன்னு பதிவு செஞ்சிருவாங்க. திடீர்னு முடியாதுன்னு சொல்லிடுவாங்க. அப்படிப்பட்டவங்க இந்த இணையதளத்துல ‘ரிப்போர்ட்’ பகுதியில் அந்த விபரத்தை பதிவு செய்யணும்.

இப்படிப் பதிவு செஞ்ச பிறகு டோனர்களின் பெயர்கள் உடனடியாக லிஸ்ட்டில் இருந்து நீக்கப்பட்டு விடும்.

சேவைக்கு அங்கீகாரம்

எந்தச் சேவைக்கும் அங்கீகாரங்கிறது ரொம்ப ரொம்ப முக்கியம். அப்படிப்பட்ட அங்கீகாரம்தான் அந்தச் சேவை தொடர்வதற்கு ஊக்கமாக இருக்கும். அப்படி, எங்களோட இந்த இணையதளச் சேவைக்காக ‘லிம்கா விருது’ உள்ளிட்ட பல விருதுகள் கிடைச்சிருக்கு. ஆஸ்திரியாவைச் சேர்ந்த ‘வேர்டு யூத் சம்மிட்’ அமைப்பானது வருடந்தோறும் சமூகச் சேவை புரியும் அமைப்புகளுக்கு விருதுகளைக் கொடுக்கிறது வழக்கம். போன வருஷம் எங்களது அமைப்பின் சேவையைப் பாராட்டிக் கொடுத்தது.
வசதியும் - வருங்காலத் திட்டமும்

ஆண்ட்ராய்டு, ஐ போன் மற்றும் விண்டோஸ் போன் மூலமும் இந்த வசதிகள் பெறக் கூடிய புதிய இலவச அப்ளிகேஷனை போன வருஷம்தான் அறிமுகப்படுத்தினோம். கேரள மாநிலத்துக்கான ஒருங்கிணைப்பாளர் ஜெயந்த் ஜஸ்டின்தான் உருவாக்கித் தந்தார்.

தற்போது இணையத்தைப் பயன்படுத்துகிறவர்கள் மட்டுமே ரத்த தானம் செய்ய முடியும். அதேசமயம், படிப்பறிவு இல்லாதவர்களும், இணையம் பற்றித் தெரியாதவர்களும் ரத்தம் தேவைப்படும்போது என்ன செய்ய முடியும். அவர்களுக்குப் பயன்படும் வகையில், toll free நம்பர் அறிமுகப்படுத்தறத் திட்டமும் இருக்கு.

நன்றி - மு.அழகர்பாரதி 
மற்றும் வேடந்தாங்கல்


Monday, 27 October 2014

நன்றியை சொல்ல வேறு வார்த்தை இருக்கா?

அழைத்தவர்களுக்கும், வரவேற்றவர்களுக்கும், நிகழ்ச்சி சிறப்பாக நடந்திட பாடுபட்டவர்களுக்கும் என் நன்றியை தெரிவிக்க விழைகிறேன். ஆனால் என்னிடம் இப்போதைக்கு நன்றி என்கிற வார்த்தையை தவிர வேறெதுவும் இல்லை. கிடைத்ததும் பகிர்வேன்.

Wednesday, 20 August 2014

ஒரு இனிய அனுபவம்

சில அனுபவங்கள் வாழ்வில் மறக்க முடியாததாகவும்,
சில அனுபவங்கள் மறக்க வேண்டியதாகவும்,
சில வாழ்வில் ஒளிகாட்டும் விளக்காகவும்
சில இருள் நிறைந்ததாகவும் அமைந்து விடும்.
அவ்வாறின்றி எனக்கு
ஓர் அற்புதமான அனுபவம்
இனிமை தரும் மகிழ்வான அனுபவம்.
மாற்றத்தை உருவாக்கிய அனுபவம்.
மலர்ச்சியை ஏற்படுத்திய அனுபவம். அன்மையில் ஏற்பட்டது.
அதுகுறித்து விவரிப்பதற்க்கு முன் அங்கு என் கண்முன் நடந்த சில அதிசயங்களை பகிர்கிறேன்.

1) சாதாரணமாக குறைந்தது சுமார் 10000 பேருக்கு மேல் கூடிய ஒரு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் குறைந்தது எத்தனை காவல்துறை உயர் அதிகாரிகள், எத்தனை அலுவலர்கள், எத்தனை துணை அலுவலர்கள், எவ்வளவு காவலர்கள், மற்றும் வாகனங்கள் தேவையிருக்கும்?.

ஆனால் நான் கண்ட அந்த கூட்டத்தில் பெயருக்கு கூட ஒரு காவலரைக்கூட காணவில்லை.

2) அவ்வளவு பேர் கூடுமிடத்தில் சாதாரணமாக எவ்வளவு சத்தம் மற்றும் இரைச்சல் ஏற்படும்?.

ஆனால் அங்கு நான் கண்டது அமைதியை தவிர வேறில்லை.

3) நம் வீட்டு விசேஷத்திலேயே உணவு பரிமாறும்போது எத்தனை குறைகள் நடந்துவிடுகிறது?.

ஆனால் அத்தனை பேருக்கு உணவு பரிமாறுகையில் ஒரு சிறு தள்ளுமுள்ளு கூட நடைபெறவில்லை.

மேற்கண்ட நிகழ்வுகள் புணைந்து சொல்லப்பட்டவை அல்ல. அனுபவமாக உணர்ந்தவை.

Wednesday, 6 August 2014

பறக்கும் சாலையில் ப(ண)யமாய் ஒரு பயணம்

சில தினங்களுக்கு முன் அதிகாலையில் ஒரு உறவினரின் இல்ல விழாவுக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு நகரத்தையொட்டிய கிராமத்திற்க்கு இரு சக்கர வாகனத்தில் பயணிக்க நேர்ந்தது. அதே சாலையில் பலமுறை பயணித்திருந்தாலும் அந்த பயணம் புதிதாகவும் திகிலாகவும் அமைந்து விட்டது.

சாதாரணமாக 40 கிமீ வேகத்தில் சென்றாலே இரண்டு மணி நேரத்தில் சென்று விடக்கூடிய தூரம்தான். அதிலும் பாதி தூரம் நரகங்களை இணைக்கவென்றெ அமைக்கப்பட்ட தங்க நாற்கர சாலையும் மீதி கிராம மக்களுக்கென்று உள்ள சாதாரண (தகர) சாலையுமாக இருந்தது.

முன்பெல்லாம் கணரக வாகன ஓட்டுநர்களை எமனின் தூதர்கள் என கேலி பேசுவதுண்டு. தற்போது அதை காரோட்டிகள் கைப்பற்றி விடுவார்கள் போல் தோன்றுகிறது.

சாதாரணமாக சாலையில் முந்துவதற்க்கு உள்ள விதிமுறைகளில் முக்கியமானவை
1) வலது பக்கத்தில் மட்டுமே முந்த வேண்டும்.
2) முந்துவதற்க்கு முன் முன்னே செல்லும் வாகனத்திற்கு சமிக்சை செய்ய வேன்டும்.

இந்த குறைந்த பட்ச விதிகளைக்கூட பின்பற்ற தவறுகின்றனர். (அல்லது) மதிக்க மறுக்கின்றனர்.
இதன் காரணமாக சாலையில் பயணப்படும் சாமான்ய மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள், பல நேரங்களில் உயிரின் மதிப்பை உணர மறுக்கும் சில வாகன ஓட்டுநர்கள் எந்த பாதிப்புக்கும் ஆளாவதில்லை. ஆனால் அப்பாவி மக்கள் விபத்துக்குள்ளாகி காயப்படுவதும் சில நேரங்களில் உயிரிழப்பதும் தொடர்கிறது.

அன்று நான் பார்த்தது அந்த அதிகாலை நேரத்திலேயே சுமார் 100 க்கும் மேற்பட்ட கார்கள் இருக்கும்.

அவரவர் அவசரத்துக்கு விரைந்து செல்வதை தவறென்று சொல்லவில்லை.
ஆனால் அன்று பயணித்த கார்களில் பெரும்பாலானவை எந்த வரைமுறைக்கும் கட்டுப்படாமல் இடது வலது என மாறி மாறி முந்திச்சென்றன.

இதன் காரணமாக அதிகாலை வேளையில் வாழ்க்கையை துவங்கும் கீரை வியாபாரிகள், பால்காரர்கள், விவசாயிகள் மிரண்டு குழம்பி ஒதுங்கியதை கண்டு மனம் வருந்தினேன்.சாலையை அகலப்படுத்தி ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்துள்ளது பயணிப்பவர்கள் வசதிக்காத்தானே தவிர தங்கள் விருப்பம்போல் பறப்பதற்க்கு அல்ல என்பதை எப்போது உணர்வார்களோ?.

மேலும் இவ்வளவு வசதிகள் செய்ய முடிகின்ற அரசாங்கங்கள் சாலை பாதுகாப்பை கண்கானிக்க போக்குவரத்து காவலர்களை மட்டுமே சார்ந்திருக்காமல் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் சாலை விபத்துகள் பெருமளவில் குறையுமென நம்பலாம். செய்வார்களா?