முந்தைய அப்பாவி ஆறுமுகமும் அவனது கடவுள்களும்...
எனும் பதிவு
இந்த மழை சூழ்ந்த நிலையில் அதுவும் நம் அன்புக்குறிய மீசைக்காரர் கில்லர்ஜி பற்ற வைத்த கடவுளை கண்டேன். எனும் (பட்டாசு) தொடர்பதிவின் தொடர்ச்சியோ!!! எனும் ஐயம். சில அன்பர்களுக்கு ஏற்பட்டதை அறிந்தேன்.
அதன் விளைவே இவ்விளக்கத்துடன் கூடிய ஒரு சிறு 'முன்கதை சுருக்கம்'
கடந்த பதிவில் ஆரம்பத்தில் ராஜ்குமார் எனும் ஒரு பாத்திரத்தை அறிமுகப்படுத்தும் போது அவனுக்கும் அவனது அதிகாரிக்கும் நடந்த உரையாடலை பதிவிட்டிருந்தேன்..
அதற்கு முன் நடந்த சிலவற்றை தொடரினூடே சொல்ல நினைத்தேன். ஆனால் நம் அன்பு கில்லர்ஜி அவர்களின் முயற்சியால் சுறுசுறுப்பாகி உள்ள நம் பதிவுலக அன்பர்கள் குழம்ப வேண்டாமென்பதால் மிக மிக சுருக்கமாக ஒரு முன்கதை சுருக்கம்...
நாட்டில் மிக பலமாக வேரூன்றி மூலைமுடுக்கெல்லம் கால் பதித்துள்ள ஒரு பெரும் நிறுவனத்தின் கிளையில்தான் ராஜ்குமார் பணிபுரிந்து வந்தான். அவனது அலுவலகம் மற்றும் சுற்று சூழல் காரணமாக அந்த நிறுவனத்தின் வேறு ஒரு கிளைக்கு மாறுதல் கேட்டு விண்ணப்பித்தான். அத்துடன் அதை மறந்துவிட்டு தன் அன்றாட அலுவலக பணிகளில் மூழ்கி விட்டிருந்தான்..
அந்த சூழலில்தான் அவனுக்கு விருப்ப மாறுதல் உத்தரவு வந்த தகவலை அவனது அதிகாரி அவனுக்கு சொன்னார்..
முன் ஜாக்கிரதையுடன் ஓர் பின்குறிப்பு : இது அண்மையில் ஏற்பட்ட மழை , புயல், கில்லர்ஜியின் கடவுள், மற்றும் சில படிப்பினைகள் தந்த அனுபவங்களின் தொடர் அல்ல..
ஒருவனுக்கு பாதிப்பு ஏற்படும்போது
யாரெல்லாம் உடன் வருவார்கள்.,?
யாரெல்லாம் எட்டி நின்று பரிதாபப்படுவார்கள்.,?
யாரெல்லாம் பரிகசிப்பார்கள்.,?
எனும்
உண்மையை
உணரச் செய்யும் ஒரு சிறு முயற்சியே.. இதில் என்னால் இயன்றவரை கலப்படமின்றி உண்மை சொல்ல முயல்கிறேன்.
இது கில்லர்ஜியின் பதிவின் தொடர்ச்சி அல்ல என்பது உண்மை. அதே நேரத்தில் தொடர்பற்றது என்றும் சொல்லி விட முடியாது. அவர் கனவில் வந்தது ஒரே கடவுள். ஆனால் நம் ஆறுமுகத்தை சந்தித்ததும், சோதித்ததும் பல கடவுள்கள்..
மற்ற விவரங்களுக்கு சற்று பொறுத்திருப்போமே...!