Saturday 17 April 2021

கனவுகளை மெய்ப்பிக்க வந்த கலைஞன் விவேக் அமரரானார்

 கனவு காணுங்கள் என உற்சாகமூட்டிய அமரர் அப்துல் கலாம் அவர்களை தன் குருவாய் ஏற்று அவர் காட்டிய திசையில் பசுமை தமிழகம் கான உழைத்த நகைச்சுவை கலைஞர் விவேக் அமரரானார்.


தொடர்ந்து தன் பணிகளுக்கிடையிலும் சமூகத்துக்கான தன்னுடைய பங்களிப்பாக மரக்கன்றுகள் நடுவதை தன் இயல்பாக கொண்டிருந்தார்.


அவர் தன் வாழ்நாள் கடமையாக செய்து வந்த பணியை தொடர்வதே அவருக்கு நாம் செய்திடும் மாண்பமைந்த அஞ்சலி. வாழ்க அவர் புகழ். 🙏

Monday 19 November 2018

நுனிப்புல் பார்வைகள்

மறுபிரவேசம் செய்த வேளையில் கஜாவின் சூறையாட்டம் பாதிப்பு அளவு முழுமையாக தெரியாது. அதன் விளைவுகளின் வீச்சு  சிறிதென்றாலும் வெகுவாக மக்களைத் துவைத்துப் போட்டு விட்டது.

எதையுமே உள்வாங்காது வேகமாக மென்று தின்று துப்பும் 'நுனிப்புல்' மேயும் கலாச்சாரத்துக்கு தெரிந்தும் தெரியாமலும் ஆளாகி வருகிறோம்.

சாதாரண தகவல் தொடர்புப் பணிகளில் கூட பொறுப்பும் கவனமுமற்றோர் பெருகியும், அதன் விளைவை பாமர மக்கள் மீது திணித்தும் வருகிறோம்.

இது சம்மந்தமான எளிய மொழியில் பகிரலாமென்றாலே, பல பக்கங்கள் தேவைப்படுகிறது.

துரித உணவு தின்று மாளும் நம் நவீன பார்வைக் கலாச்சாரம் சார்ந்த 'சான்றோர்' முகம் சுளித்து விடுவர் எனும் அச்சம் காரணமாக நேர்த்தியாய் இல்லாவிட்டாலும் நேர்மையாயும், நேர்மறையாயும்  இனி பதிவுகள் தொடரும்.

இதில் சமூகம் சார்ந்த பார்வையில் எந்த திரிபும் அலங்கார வார்த்தையும் இன்றி பகிர்வுகள் வரும். தொடர்வோம்...

Saturday 17 November 2018

மீண்ட சொர்க்கம்

நீண்ட இடைவெளி அதன்

காரணத்தை விவரிக்கும் முன் எந்த

வெட்கமும் இன்றி என்

வருத்தத்தை தெரிவித்து

மன்னிப்பையும் கேட்டுக்

கொள்கிறேன்.


இந்த இடைவெளிக்குக் காரணம்

சமூக அக்கறையில் எந்தவிதமான

பெரும் பயிற்ச்சியுமில்லாத நான்

சில காலங்களுக்கு முன் இளைய

எழுத்தாளுமைகள் சிலர் காட்டிய

வேகத்தைக் கண்டு மகிழ்ந்தேன்.


இவர்களைவிட நாமென்ன

பெரிதாக எழுதி சாதித்து விடப்

போகிறோம் என்று எண்ணியதன்

விளைவாக எழுதும் பயிற்சியை

நிறுத்தி விட்டு வாசிப்பில் மட்டும்

கவனம் செலுத்தலானேன். இதைத்

தவிர வேலைப்பளு காரணம்

என்றெல்லாம் சப்பைகட்டு

காரணங் கூற விரும்பவில்லை.

அதில் உண்மையுமில்லை.

ஆனால் அது எத்தனை

பெரும் பிசகு என்பதை

உணர்ந்ததன் காரணமாக இதோ

மீண்டும் களம் புகுகிறேன்.

இப்போது சில உறுதிகளைத்

தயாரித்து தர திட்டமும்

வைத்துள்ளேன்.


அவற்றை இனி வரும் காலங்களில்

விவரிக்கிறேன். தொடர்கிறேன்

இனி தொடர்ந்திடுங்கள் என

அழைப்பு தந்து......

Wednesday 16 May 2018

தந்தையுமானவன்

அமரர் பாலகுமாரன் அய்யா,

ஊர் விட்டு ஊர் செல்வதற்கே

சொல்லிவிட்டு போக வேண்டும்

யெனப் பயிற்றுத் தந்த தந்தைக்கு

நிகரானவர் நீர்.


வயதும் மூப்பும் வளருதல் கண்டு

களிக்க வேண்டிய வயதில்

எல்லோரும் அஞ்சியழும்

இயற்கையை தயாராயிருந்து

எதிர்கொண்டீர். மற்றவருக்கு

வேண்டுமானால், உம் மரணம்

அதிர்ச்சியளிக்கலாம். ஆனால்

உமக்கோ அது எதிர்பார்த்துக்

காத்திருந்து பெற்ற பெரும்

விடுதலை.


இனி யெந்த தேடலுமில்லை.

உடலால் எந்த உபாதையுமில்லை.

இளைப்பாறும்.

இனியெல்லாம் சுகமே.

Thursday 26 October 2017

மறக்கத்தான் நினைக்கின்றேன்.

என் தனி வாழ்வில் பல சோதனைகளை சந்தித்த போது  கூட இல்லாத வேதனை!
தற்போது.

இன்றுடன் நான் நேசித்த பதிவர்களை நேரில்  'த'ரிசித்து 3 வருடம் முடிகிறது.

தமிழை அறியா 'தவன்' கூட இருக் 'கலாம்'.

ஆனால் தமிழ் பேரை வைத்து வாழ நினைக்கும் சிலர், மற்றவரை தூண்டி விட்டு  அற்ப சுகம் காண இருக்கின்றனர். (பேசுவோம்) .

2013 லில் நான் ஏதோ திக்கித் தினறி பதி வெழுத முற்பட்ட போது என்னை உற்சாக படுத்திய பல அன்பர்கள் இன்று அவர் செயலால் அற்பர்களாய் தெரிகின்றனர்.

அதன் விளைவே நாம் காணும் நாடகங்கள். எனக்கு தெரிந்தவரை எல்லோரும் நல்லவரே?!?! என நம்பி வாழும் அற்பன் நான்.

அற்புத பதிவுகள் தரும் பதிவர்கள் அருகி வரும் நிலையில்  நமக்கு இப்படி ஓர் அவசியம் தேவையா? மனிதர் உடலில் கொழுப்பு தேவை! ஆனால் மூளையில் அது  தேவையா?. 

Sunday 9 July 2017

ஒரு கூட்டம் ஒரு குறை

நேற்று மாநிலத் தலை நகரில் ஓர் கலந்துரையாடலுடன் ஒரு கூட்ட
நி(நெ)கிழ்ச்சி நடந்தது. கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள். நிகழ்ச்சி பற்றி கேட்டதனால் சொல்ல நினைக்கிறேன்.

மனதில் உள்ளதை உள்ளபடி. 

Sunday 12 March 2017

அட கூலிப் பயலுகளா!?

இன்று  நம் தமிழ் மக்கள் மட்டு மல்ல, அனை வரும் குழம்பி யுள்ளதாக

'நி''னைத்து'

அவலை 'நி' னைத்து  ரலையா ட்டும்  தற்குறிக்கு .,

தமிழ் என்ன உன் தோட்டத்தில் உள்ள களையா. பிடுங்கி எறிய.

நேற்று வரை...., நீ இருந்த இட மெமக்கு மட்டு மல்ல உண்மை தமிழர்

யாருமறி ந்தது. கனவு அது நீ காணலாம். அது தவறி ல்லை.

ஆனால் தமிழரை குறைத்து மதிப்பிட்டு நீ காண்பது பகல் கனவே.

பலிக்கா துன் கனவு. வேறு பணி யிருப் பின் போய் பார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திலேயே  நீ ஜாக்கிரதை யாய் தள்ளி நின்று

ரோட்டோரமாய்   'ப'ரோட்டாவை  நக்கி   தின்றதை தமிழகமே கண்டது.

அண்ணா பொழுது விடிஞ் சாச்சு . நாளைக்காவது  நல்லது எதையாச்சும்

பு துசா சொல்லி கூவு.