Monday, 19 November 2018

நுனிப்புல் பார்வைகள்

மறுபிரவேசம் செய்த வேளையில் கஜாவின் சூறையாட்டம் பாதிப்பு அளவு முழுமையாக தெரியாது. அதன் விளைவுகளின் வீச்சு  சிறிதென்றாலும் வெகுவாக மக்களைத் துவைத்துப் போட்டு விட்டது.

எதையுமே உள்வாங்காது வேகமாக மென்று தின்று துப்பும் 'நுனிப்புல்' மேயும் கலாச்சாரத்துக்கு தெரிந்தும் தெரியாமலும் ஆளாகி வருகிறோம்.

சாதாரண தகவல் தொடர்புப் பணிகளில் கூட பொறுப்பும் கவனமுமற்றோர் பெருகியும், அதன் விளைவை பாமர மக்கள் மீது திணித்தும் வருகிறோம்.

இது சம்மந்தமான எளிய மொழியில் பகிரலாமென்றாலே, பல பக்கங்கள் தேவைப்படுகிறது.

துரித உணவு தின்று மாளும் நம் நவீன பார்வைக் கலாச்சாரம் சார்ந்த 'சான்றோர்' முகம் சுளித்து விடுவர் எனும் அச்சம் காரணமாக நேர்த்தியாய் இல்லாவிட்டாலும் நேர்மையாயும், நேர்மறையாயும்  இனி பதிவுகள் தொடரும்.

இதில் சமூகம் சார்ந்த பார்வையில் எந்த திரிபும் அலங்கார வார்த்தையும் இன்றி பகிர்வுகள் வரும். தொடர்வோம்...

Saturday, 17 November 2018

மீண்ட சொர்க்கம்

நீண்ட இடைவெளி அதன்

காரணத்தை விவரிக்கும் முன் எந்த

வெட்கமும் இன்றி என்

வருத்தத்தை தெரிவித்து

மன்னிப்பையும் கேட்டுக்

கொள்கிறேன்.


இந்த இடைவெளிக்குக் காரணம்

சமூக அக்கறையில் எந்தவிதமான

பெரும் பயிற்ச்சியுமில்லாத நான்

சில காலங்களுக்கு முன் இளைய

எழுத்தாளுமைகள் சிலர் காட்டிய

வேகத்தைக் கண்டு மகிழ்ந்தேன்.


இவர்களைவிட நாமென்ன

பெரிதாக எழுதி சாதித்து விடப்

போகிறோம் என்று எண்ணியதன்

விளைவாக எழுதும் பயிற்சியை

நிறுத்தி விட்டு வாசிப்பில் மட்டும்

கவனம் செலுத்தலானேன். இதைத்

தவிர வேலைப்பளு காரணம்

என்றெல்லாம் சப்பைகட்டு

காரணங் கூற விரும்பவில்லை.

அதில் உண்மையுமில்லை.

ஆனால் அது எத்தனை

பெரும் பிசகு என்பதை

உணர்ந்ததன் காரணமாக இதோ

மீண்டும் களம் புகுகிறேன்.

இப்போது சில உறுதிகளைத்

தயாரித்து தர திட்டமும்

வைத்துள்ளேன்.


அவற்றை இனி வரும் காலங்களில்

விவரிக்கிறேன். தொடர்கிறேன்

இனி தொடர்ந்திடுங்கள் என

அழைப்பு தந்து......

Wednesday, 16 May 2018

தந்தையுமானவன்

அமரர் பாலகுமாரன் அய்யா,

ஊர் விட்டு ஊர் செல்வதற்கே

சொல்லிவிட்டு போக வேண்டும்

யெனப் பயிற்றுத் தந்த தந்தைக்கு

நிகரானவர் நீர்.


வயதும் மூப்பும் வளருதல் கண்டு

களிக்க வேண்டிய வயதில்

எல்லோரும் அஞ்சியழும்

இயற்கையை தயாராயிருந்து

எதிர்கொண்டீர். மற்றவருக்கு

வேண்டுமானால், உம் மரணம்

அதிர்ச்சியளிக்கலாம். ஆனால்

உமக்கோ அது எதிர்பார்த்துக்

காத்திருந்து பெற்ற பெரும்

விடுதலை.


இனி யெந்த தேடலுமில்லை.

உடலால் எந்த உபாதையுமில்லை.

இளைப்பாறும்.

இனியெல்லாம் சுகமே.