இப்போதாவது கரை(றை)களைக் களைந்தால் என்ன?!
இன்று
ஒரு மனித நேயம் மிக்க மகானுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.
என்ற பெயரில் தங்களது குடும்பத்தாரையும், கூட்டாத்தாரையும்,
அண்டிப் பிழைப்போரையும் சேர்த்துக் கொண்டு அந்தச் சிறிய தீவை மிதித்து
அழுக்காக்கி விடாதீர்கள். ஏற்கனவே அது குடிக்க நீர்கூட
இன்றி தவிக்கும் பூமி. இந்நேரத்தில் கரைகள் அங்கு குவிந்து
அம்மாமனிதரின் அன்பைத் தவிர வேறு எதையும் எதிர்பாரா மக்களை
எந்த வகையிலும் நோகடித்து விடாதீர்கள். அது ஒரு மிக
மிகச் சிறிய கூடு. தங்கள் செல்ஃபி எடுக்கும் செல்ஃபிஷ் தனத்தை அடக்கி
வைத்துக் கொண்டு, அவரது கனவை நனவாக்குவோம் என்ற ஒரு சிறிய
அல்ல அல்ல சீரிய உறுதி எடுத்துக் கொண்டு அஞ்சலி செலுத்தி உடனடியாகத்
திரும்புவதன் மூலம் அன்னாருக்கு மற்றவர்களும் அவர் குடும்பத்தினரும்
அஞ்சலி செலுத்தவும் ஆறுதல் பெறவும் வாய்ப்பளிக்க வேண்டுகிறேன்.
ஆடிப்பட்டம் தேடிய விதைதான்.
ஆடிப்பட்டம் தேடி விதைதான்.
ஆம் கலாம் அவர்கள் விதைதான்.
ஆடிப்பட்டம் தேடிய விதைத்தான்.