சில அனுபவங்கள் வாழ்வில் மறக்க முடியாததாகவும்,
சில அனுபவங்கள் மறக்க வேண்டியதாகவும்,
சில வாழ்வில் ஒளிகாட்டும் விளக்காகவும்
சில இருள் நிறைந்ததாகவும் அமைந்து விடும்.
அவ்வாறின்றி எனக்கு
ஓர் அற்புதமான அனுபவம்
இனிமை தரும் மகிழ்வான அனுபவம்.
மாற்றத்தை உருவாக்கிய அனுபவம்.
மலர்ச்சியை ஏற்படுத்திய அனுபவம். அன்மையில் ஏற்பட்டது.
அதுகுறித்து விவரிப்பதற்க்கு முன் அங்கு என் கண்முன் நடந்த சில அதிசயங்களை பகிர்கிறேன்.
1) சாதாரணமாக குறைந்தது சுமார் 10000 பேருக்கு மேல் கூடிய ஒரு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் குறைந்தது எத்தனை காவல்துறை உயர் அதிகாரிகள், எத்தனை அலுவலர்கள், எத்தனை துணை அலுவலர்கள், எவ்வளவு காவலர்கள், மற்றும் வாகனங்கள் தேவையிருக்கும்?.
ஆனால் நான் கண்ட அந்த கூட்டத்தில் பெயருக்கு கூட ஒரு காவலரைக்கூட காணவில்லை.
2) அவ்வளவு பேர் கூடுமிடத்தில் சாதாரணமாக எவ்வளவு சத்தம் மற்றும் இரைச்சல் ஏற்படும்?.
ஆனால் அங்கு நான் கண்டது அமைதியை தவிர வேறில்லை.
3) நம் வீட்டு விசேஷத்திலேயே உணவு பரிமாறும்போது எத்தனை குறைகள் நடந்துவிடுகிறது?.
ஆனால் அத்தனை பேருக்கு உணவு பரிமாறுகையில் ஒரு சிறு தள்ளுமுள்ளு கூட நடைபெறவில்லை.
மேற்கண்ட நிகழ்வுகள் புணைந்து சொல்லப்பட்டவை அல்ல. அனுபவமாக உணர்ந்தவை.